கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்ட நபர்.... ஒரே நாளில் ஹீரோவான டெல்லி இளைஞர்!
டெல்லியைச் சேர்ந்த கரண் என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.
டெல்லி : டெல்லியைச் சேர்ந்த கரண் என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்தி கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது. 28 வயது நிரம்பிய இவர் தேர்ந்த பச்சைக் குத்தும் நபர் ஆவார். உடல் நிறைய பச்சைக் குத்தியிருக்கும் இவர் தற்போது கண்களுக்குள்ளும் பச்சைக் குத்தி இருக்கிறார்.
இவர் கண்களில் பச்சைக் குத்தி இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகியுள்ளது. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆகியுள்ளார் இந்த நபர்.

பச்சைக் குத்தும் தொழில்
டெல்லியச் சேர்ந்த கரண் என்ற 28 வயது நிரம்பிய நபர் தேர்ந்த தொழில் முறை பச்சைக் குத்தும் நபர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இவர் பச்சைக் குத்தியுள்ளார் . இதன் மூலம் இவர் நல்ல நிலையான வருமானத்தைப் பெறுவதாக தெரிவித்துள்ளார். தன்னைத் தேடி வரும் மக்களுக்கு பச்சைக் குத்திவிடுவதே இவரது முக்கிய ஹாபி என்று தன்னுடைய பேட்டிகளில் இவர் தெரிவித்துள்ளார்.

எங்கும் பச்சை
தன்னுடைய பதினாறு வயதில் பச்சைக் குத்திக் கொள்ளத் தொடங்கிய கரண் கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் பச்சைக் குத்தியுள்ளார். உடலில் எத்தனை பச்சைக் குத்தியிருக்கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பச்சைக் குத்துவதோட நிற்காமல் உடலில் 22 துளைகள் இட்டு அதில் வளையங்களும் மாட்டி இருக்கிறார் இந்த நபர்.

கருவிழி இல்லை பச்சை விழி
உடல் முழுவதும் பச்சைக் குத்தியதை அடுத்து வேறு எங்கும் பச்சைக் குத்த இடம் இல்லாமல் இவர் தன்னுடைய கண்களில் பச்சைக் குத்த முடிவு எடுத்துள்ளார். மிகவும் சிக்கலான இந்த பச்சைக் குத்தும் முறையை அமெரிக்காவில் செய்து விட்டு வெற்றிகரமாக இந்தியா திரும்பி இருக்கிறார் இவர். தற்போது அந்தப் புகைப்படங்களை நெட்டில் ஏற்றியுள்ளார்.

கண்களில் பச்சைக் குத்தும் ரகசியம்
கணுக்காலில் பச்சைக் குத்துவது மிகவும் கடினமான வேலை என்று இவர் குறிப்பிடுகிறார். ''வலிக்காமல் இருக்க ஊசி போட்ட பின் எந்த நிறம் வேண்டுமோ அந்த நிறத்தில் மிகவும் சூடான கலவையை கண்களில் மெதுவாக பாய்ச்சுவார்கள்'' என்று கூறியுள்ளார். என்னதான் வலிக்காமல் இருக்க ஊசி போட்டாலும் அந்த நேரத்தில் வலி மிகவும் அதிகமாக இருக்குமாம். அதுமட்டும் இல்லாமல் இதைச் செய்வதற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகும் எனவும் கூறியுள்ளனர்.

ஆன்லைனில் வைரல் ஆனார்
இவர் கண்களில் பச்சைக் குத்தியபின் அந்தப் புகைப்படங்களை ஆன்லைனில் ஏற்றியுள்ளார். இன்ஸ்ட்டாகிராமிலும், பல சமூக வலைதள பக்கங்களிலும் இந்தப் புகைப்படம் சிறிது நேரத்திலேயே வைரல் ஆனது. யாருக்கும் தெரியாமல் இருந்த இவரது பச்சைக் குத்தும் கடை ஒரே நாளில் டெல்லியில் பேமஸ் ஆனது. மேலும் இந்தியாவிலேயே முதலில் கண்களில் பச்சை குத்திய நபர் இவர்தான் என்கிறார் பெருமையாக.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications