வேண்டாம் வேண்டாம் என கதறியவர்கள் காப்பாற்ற முயற்சிக்கவில்லையே.. பரிதாபமாக பறிபோன உயிர்!
உத்தரப்பிரதேசத்தில் மனைவி தற்கொலை செய்ததை கணவன் குடும்பத்தார் வீடியோவாக எடுத்து இன்டர்நெட்டில் போட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மனைவி தற்கொலை செய்ததை கணவன் குடும்பத்தார் வீடியோவாக எடுத்து இன்டர்நெட்டில் போட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒட்டு மொத்த நாட்டையும் ஒப்பிடும் உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில்தான் பெண்களுக்கு எதிராக அதிகளவு குற்றங்கள் நடப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததை கணவன் குடும்பத்தார் வீடியோ எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கதவை பூட்டிக்கொள்கிறார்
கணவன் குடும்பத்தார் வெளியிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இருப்பதாவது,
உத்திரபிரதேசத்தில் மதுரா பகுதியில் 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், மனமுடைந்து வீட்டின் கதவை பூட்டி கொள்கிறார்.

கூச்சலிடும் சொந்தங்கள்
திடீரென சேலை ஒன்றினை எடுத்து மின்விசிறியில் மாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். அனைவரும் வேண்டாம் வேண்டாம் என கூச்சலிட, ஒருவர் மட்டும் விடுங்கள் அவள் சாகட்டும் என்கிறார்.

வீடியோ எடுத்த குடும்பம்
அதற்குள் அந்த இளம்பெண் தூக்கில் தொங்கியபடியே துடிதுடித்து இறந்து போகிறார். இதனை வீடியோவாக படம் பிடித்த கணவன் வீட்டை சேர்ந்த ஒருவர் அதனை இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்துள்ளார்.

காப்பாற்ற முயற்சிக்கவில்லை
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும்போது அதனை வீடியோ எடுக்க துணிந்த அந்த நபர் அவரை காப்பாற்ற கொஞ்சமும் முயற்சிக்கவில்லை.

அவலத்தின் உச்சம்
கொஞ்சம் முயற்சி செய்திருந்தாலும் அந்தப் பெண்ணின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களைதான் பலர் வேடிக்கை பார்ப்பது, செல்பி எடுப்பது வீடியோ எடுப்பது என செல்கின்றனர் என்றால் வீட்டில் தற்கொலை செய்பவர்களையும் காப்பாற்றாமல் வீடியோ எடுத்து வெளியிட்டிருப்பது அவலத்தின் உச்சம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications