டிஜிட்டல் இந்தியா திட்டம் படுதோல்வி.. தப்பு செய்துவிட்டோம் என புலம்பும் 'முன்மாதிரி' கிராம மக்கள்!

ஆந்திரா வங்கியின் உள்ளூர் கிளை மேலாளர் முல்லா சங்கர் இதுகுறித்து கூறுகையியல், கிராமத்தில் கேஷ்லெஸ் பரிவர்த்தனை தோல்வியை தழுவிவிட்டது என்றார்.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இந்தியாவில் முதன்முதலாக பணமற்ற பரிவர்த்தனைக்கு மாறிய ஒரு கிராமம் இன்று, எந்த நிலைக்கு வந்துள்ளது என்பதை பார்த்தால் டிஜிட்டல் இந்தியா கோஷம் மண்ணை கவ்விவிட்டதை தெரிந்துகொள்ளலாம்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு திரும்ப பெற்றது. இதனையடுத்து ஊழலை ஒழிக்கும் விதமாக கேஷ்லெஸ் வர்த்தகத்திற்கு மாறுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு எங்கும் எதிலும், பண அட்டைகள் புழக்கத்திற்கு வந்தன.

இந்த கோஷங்களை பார்த்து சில்லரையை சிதறவிட்ட கிராமம்தான், தெலுங்கானாவின் இப்ரஹிம்பூர் என்ற கிராமம். சித்திப்பேட்டை சட்டசபை தொகுதியில் உள்ள இப்ராஹிம்பூர் கிராமம், அரசு பேச்சை கேட்டு முற்றிலும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறியது.

கிராமமே மாறியது

கிராமமே மாறியது

அதிலும், எ.எல்.ஏ. ஹரீஷ் ராவ்தான் இதில் மிக மும்முரமாக இருந்தார். இப்ரஹிம்பூர் கிராமத்தையே அவர் தத்தெடுத்து கேஷ்லெஸ் பரிவர்த்தனைக்கு மாற்றினார். இந்த தகவல் மீடியாக்கள் வாயிலாக நாடு முழுக்க சென்றடைந்தது. இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் வெற்றி என்று மார்தட்டினர் ஆளும் கட்சியினர். கிராமத்தை சேர்ந்த எல்லோருக்குமே, வங்கியில் கணக்கு தொடரப்பட்டு, பணமில்லா பரிவர்த்தனை ஆரம்பிக்கப்பட்டது.

நிலைமை பரிதாபம்

நிலைமை பரிதாபம்

இப்படியெல்லாம் உருமாறி அசத்திய இப்ரஹிம்பூர் நிலை இப்போது பரிதாபகரமாக உள்ளது. ஏடிஎம் வசதிகள் இல்லாதது,வங்கி கார்டுகள் மூலமான பரிவர்த்தனைகளுக்கு அதிகமான சேவை கட்டணம் விதிக்கப்பட்டது ஆகியவை காரணமாக இப்போது அந்த கிராமத்தார்கள், போதுமடா சாமி என்று பழையபடி பணத்தை நோக்கி ஓடத்தொடங்கியுள்ளனர்.

எங்களுக்கே ஆப்பு

எங்களுக்கே ஆப்பு

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இணைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நாங்கள் கேஷ்லெஸ் பரிவர்த்தனைக்கு ஆதரவை கொடுத்தோம், ஆனால் அது எங்கள் முதலுக்கே மோசமாகிவிட்டது. எங்களுக்கு ஊக்கம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, எங்களிடமிருந்து அதிகமாக வசூலிக்காமலாவது இருந்திருக்கலாம். ஆனால், வங்கிகளால் அதிகமான சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதால் நாங்கள் பழையபடி நிலைக்கே திரும்பிவிட்டோம் என கூறுகின்றனர் கிராம மக்கள். தாங்கள் தவறு இழைத்துவிட்டோம் என்று கிராம மக்கள் இப்போது கூறுகிறார்கள்.

இதெல்லாம் செட் ஆகாது சார்

இதெல்லாம் செட் ஆகாது சார்

ஆந்திரா வங்கியின் உள்ளூர் கிளை மேலாளர் முல்லா சங்கர் இதுகுறித்து கூறுகையியல், கிராமத்தில் கேஷ்லெஸ் பரிவர்த்தனை தோல்வியை தழுவிவிட்டது. வங்கியிலிருந்து ஸ்வைப்பிங் மிஷ்ன்களை வழங்குவதற்கு முன்னதாகவே இதற்கு மாதம் ரூ. 1,400 வாடகை வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். ஆனால் அப்போது காணப்பட்ட ஆர்வத்தில் அவர்கள் அதைபற்றி கவலைப்படவில்லை. கிராமத்தில் மிக சிறியளவிலே வர்த்தகம் ஆகும் கடைக்காரர்களால் இந்த வாடகையை கொடுப்பது கடினம் என்ற நிலையை அவர்கள் இப்போதுதான் புரிந்துகொண்டுள்ளனர். எனவே ஸ்வைப்பிங் மிஷின்களை திரும்ப ஒப்படைத்துவிட்டனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+