அக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க!
அக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.
Recommended Video

பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை பெற்ற தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ரேணு தேவி. 46 வயதான இவருக்கு 25 வயதில் மின்டு ராம் என்ற மகன் ஒருவர் உள்ளார்.
மின்டுவுக்கு திருமணமாகிவிட்டது. அஞ்சுதேவி என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

பாலியல் தொல்லை
இந்நிலையில் மின்டு அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களை கேலி கிண்டல் செய்வதும் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதுமாய் இருந்துள்ளார். மேலும் அப்பகுதியில் கடன் பெற்று கொண்டு அதனை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியும் வந்துள்ளார்.

மனஉளைச்சலில் தாய்
மேலும் தாயார் ரேணு தேவியையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார் ரேணு.

கொலை செய்ய திட்டம்
ஒரு கட்டத்தில் மின்டுவின் சேட்டைகள் எல்லை தாண்டவே அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் ரேணுதேவி. இதற்காக கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டம் தீட்டினார் அவர்.

மின்டு சுட்டு கொலை
தரம் வீர், சரவண்குமார் ஆகியோரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்த அவர், மகனை கொலை செய்யுமாறு கூறியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் மின்டுவை சுட்டு கொன்றனர்.

மாமியார் மீது சந்தேகம்
இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மின்டுவின் மனைவி, தனது கணவர் கொலையில் மாமியார் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார்.

கொலையை ஒப்புக்கொண்டார்
இதையடுத்து போலீசாரின் சந்தேகம் ரேணுதேவியின் பக்கம் திரும்பியது. போலீசார் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த ரேணுதேவி பின்னர் கொலையை ஒப்புக்கொண்டார்.

அதிர்ச்சி சம்பவம்
இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற மகனை தாயே கூலிப்படையை ஏவி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications