நமது "பக்கத்து வீட்டில்" ஒரு குட்டி பூமி கண்டுபிடிப்பு..!
டெல்லி: சூரியக் குடும்பத்திற்கு அருகே புதிய பூமி போன்ற கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனுக்கு அருகே உள்ள பிராக்ஸிமா சென்டாரி என்ற செந்நிற குள்ள நட்சத்திரத்தை இது சுற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாறைகள் நிறைந்த கிரகமாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு கிட்டத்தட்ட பூமி போலவே உள்ளதாம். சூரியக் குடும்பத்திற்கு வெளியே, நமக்கு வெகு அருகே உள்ள கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இது சிறிய கிரகம்தான். முற்றிலும் நமது கிரகம் போல னஎன்று கூறி விட முடியாது. அதேசமயம் நமது பூமியின் சாயல் உள்ளதாம். ஏற்கனவே பிராக்ஸிமா மீது விஞ்ஞானிகளுக்கு ஒரு சந்தேகம் இருந்து வந்தது. அதாவது இந்த நட்சத்திரமானது ஒரு சூரியனைப் போல செயல்படுவதாகவும், இதை ஒரு கிரகம் சுற்றி வந்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு இருந்தது. தற்போது அந்த சந்தேகம் உறுதியாகியுள்ளது.
இதுவரை கிடைக்காமல் இருந்து வந்த ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது. பிராக்ஸிமா சூரியனைப் போல செயல்படுவதும், அதைச் சுற்றி சிறிய கிரகம் சுற்றி வருவதும், அது பூமியைப் போல இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் பிராக்ஸிமா போல ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான குட்டி குட்டி நட்சத்திரங்கள் உள்ளன. இருப்பினும் நமது சூரியக் குடும்பத்திற்கு வெகு அருகே நம்மைப் போன்ற ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இங்கு உயிரினங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இப்போதைக்கு நமது சாயல் இருந்தாலும் கூட அங்கு நம்மைப் போல யாரேனும் இருப்பார்களா என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து விண்வெளி ஆய்வாளர் லிசா கால்டெனகர் கூறுகையில், இது நமக்கு வெகு அருகில் உள்ள கிரகம் என்பது மகிழ்ச்சி தருகிறது. ஆச்சரியம் தருகிறது. விரிவான ஆய்வுகள் தேவைப்படுகிறது என்றார்.
சூரியனிலிருந்து 4.25 ஒளி ஆண்டுகள் தொலைவில்தான் உள்ளது பிராக்ஸிமா என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications