ஜெ வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் பரமானந்தா கட்டாரியா தனி மனு தாக்கல்
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க கூடாது என மூத்த வழக்கறிஞர் பரமானந்தா கட்டாரியா தனியே ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடாகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீதான விசாரணை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக கடந்த மாதம் 23-ந் தேதி முதல் நடைபெற்ற வருகிறது.

இவ்வழக்கின் கடந்த முறை விசாரணையின் போது, மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியாது என வழக்கறிஞர் பரமானந்தா கட்டாரியா நீதிபதிகளிடம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை தனியே ஒரு மனுவைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனடிப்படையில் இன்று உச்சநீதிமன்றத்தில் பரமானந்தா கட்டாரியா இது தொடர்பாக தனி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுதான் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆகையால் அவர் தமக்கு எதிரான தீர்ப்பை திருத்தம் செய்ய கோரி சிறப்பு நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.
ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. 7 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டால்தான் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
ஆகையால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணை நடைபெற்றது முறையானது அல்ல; அப்படியான நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்வைத்து மேல்முறையீட்டு விசாரணையை உச்சநீதிமன்றம் நடத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஷ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்சின் விசாரணைக்கு அம்மனுவை மாற்றி உத்தரவிட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications