ஆய்வுக்கு சென்ற இடத்தில் ரூம் போட்டு இளம் பெண்ணை கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட எம்எல்ஏ!
Recommended Video
கவுகாத்தி: மணிப்பூர் மாநிலத்திற்கு ஆய்வுக்காக சென்ற ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் எம்எல்ஏ யதுவன்ஷ் குமார் யாதவ், ஹோட்டல் அறையில் இளம்பெண் ஒருவரை கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
பீகாரில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் சார்பில் அம்மாநிலத்தின் பைப்ரா தொகுதியில் போட்டியிட்டவர் யதுவன்ஷ் குமார் யாதவ். 50 வயதை கடந்த இவர் பீகார் சட்டசபையின் உள்நாட்டு வளம் மற்றும் மத்திய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.
இந்தக் குழுவின் தலைவராகவும் யதுவன்ஷ் குமார் உள்ளார். இந்நிலையில் இவர் மணிப்பூர் மாநிலம் மோரே பகுதிக்கு ஆய்வு தொடர்பாக சென்றார்.

மோரேவுக்கு ஆய்வு
அவருடன் குழு உறுப்பினர்களான பாஜக எம்எல்ஏ சச்சின் பிரசாத், ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ ராஜ் குமார் ராய் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ ராஜா பக்கர் ஆகியோரும் சென்றனர். இந்தக்குழு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி இந்திய- மியான்மர் எல்லையில் உள்ள மோரேவுக்கு சென்றது.

கட்டிப்பிடித்து அட்டகாசம்
இந்நிலையில் அங்குள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த யதுவன்ஷ் குமார் டீன்ஏஜ் வயதுள்ள ஒரு பெண்ணை அறைக்கு அழைத்து அவருடன் ஆட்டம் போட்டுள்ளார். அந்தப்பெண்ணின் தோள்பட்டையில் கையை போட்டும் அவரை கட்டிப்பிடித்தும் எம்எல்ஏ அட்டகாசம் செய்துள்ளார்.

தயங்கிய இளம் பெண்
இதனை சற்றும் விரும்பாத அந்த பெண் எம்எல்ஏவின் கையை தட்டிவிட்டும், தொடர்ந்து எம்எல்ஏ இளம் பெண்ணின் மீது கையை போட்டு கட்டிப்பிடித்து டான்ஸ் ஆடியுள்ளார். அந்த பெண் இதனை கொஞ்சமும் விரும்பாமல் தயக்கத்துடனேயே இருப்பது வீடியோவில் தெரியவந்துள்ளது.

பட்டப்பகலில் அட்டகாசம்
எம்எல்ஏ யதுவன்ஷ் குமாருடன் சக எம்எல்ஏக்களும் ஆட்டம் போட்டுள்ளனர். ஆனால் அவர்களில் யார் இந்த வீடியோவை எடுத்தது என்பது தெரியவில்லை. வீடியோவின்படி இந்த கூத்துகள் பட்டப்பகலில் அரங்கேறியுள்ளன.

50 வயதைக்கடந்த எம்எல்ஏ
இம்பால் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி மணிப்பூர் எம்எல்ஏ ஒருவர் பீகார் எம்எல்ஏக்களுக்கு இந்த ஏற்பாடுகளை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதை கடந்த எம்எல்ஏ இளம் பெண்ணை தொந்தரவு செய்தபடி நடனம் ஆடும் வைரலாகியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications