10 கிலோ மீட்டர்.. 3 மணி நேரம்.. எஞ்சின் இல்லாமல் ஓடிய ரயில்.. ஒடிஷாவில் திக் திக் நிமிடங்கள்!
அஹமதாபாத்தில் இருந்து பூரி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எஞ்சின் இல்லாமல் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுள்ளது.
அஹமதாபாத்: அஹமதாபாத்தில் இருந்து பூரி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எஞ்சின் இல்லாமல் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுள்ளது.
டிட்லாகார் என்ற ஒடிஷா ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திய போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயிலை பின்பக்கம் எடுப்பதற்காக எஞ்சினை மாற்ற நினைத்துள்ளனர். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் இருந்து பெட்டிகள் மட்டும் இப்படி தனியாக பிரிந்து ஓடியுள்ளது. இதனால் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|
ரிவர்ஸ் எடுக்கும் போது
ரிவர்ஸ் எடுப்பதற்காக ரயிலில் இருந்து எஞ்சினை பிரித்துள்ளனர். ஆனால் ரயில் வந்த வேகத்தில் பெட்டிகள் மட்டும் பிரிந்து வேகமாக ஓட ஆரம்பித்துள்ளது. பெட்டிகளில் இருக்கும் தனிப்பட்ட பிரேக்குகளை பயன்படுத்தாததால் இப்படி நடந்து இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

எவ்வளவு தூரம்
மொத்தமாக இந்த ரயில் பத்து கிலோ மீட்டருக்கு இப்படியே வேகமாக ஓடி இருக்கிறது. காலை பத்து மணிக்கு தொடங்கிய ரயில் 1 மணி வரை நிற்காமல் சென்றுள்ளது. மொத்தமாக 10 கிலோ மீட்டர் ரயில் இப்படி சென்றதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

எப்படி
இந்த ரயில் தானாக வேகம் குறையும் வரை காத்திருந்துள்ளனர். உள்ளே இருந்து பிரேக் பிடிக்க முடியாது என்பதற்காக இப்படி செய்து இருக்கிறார்கள். இதற்காக அந்த ரயில் வரும் பாதையை சரி செய்து மற்ற ரயில்களை மாற்றி விட்டு உள்ளனர். இதனால் எந்த விதமான விபத்தும் ஏற்படாமல் தடுக்கப்பட்டு உள்ளது.

சஸ்பெண்ட்
தற்போது இந்த சம்பவம் காரணமாக மூன்று ரயில்வே பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் அலட்சியத்தால்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால் யாருடைய உயிருக்கும் சேதம் ஏற்படவில்லை. அதேபோல் ரயிலுக்கு எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications