அட கொடுமையே... ஒரே பொண்ண காதலிச்சுட்டு இந்த ஸ்கூல் பசங்க செய்த வேலைய பாருங்க!!
தெலுங்கானாவில் ஒரே மாணவியை காதலித்த இரண்டு மாணவர்கள் ஒருவருக்கொருவர் தீ வைத்துக்கொண்டனர்.
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஒரே மாணவியை காதலித்த பள்ளி மாணவர்கள் 2 பேர் போதையில் ஒருவருக்கொருவர் தீ வைத்துக்கொண்டனர். இதில் ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஹைதராபாத்தில் இருந்து 190 கிமீ தொலைவில் உள்ளது ஜக்டியா நகர். இந்த ஊரில் உள்ள பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 10 ம் வகுப்பு படித்து வந்த 2 மாணவர்கள் அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து உள்ளனர். இதில் அந்த மாணவர்களுக்குள் தகராறு இருந்து வந்து உள்ளது.

தீ வைத்த மாணவர்கள்
இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் 2 மாணவர்களும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். போதையில் இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் தீ வைத்து கொளுத்தி கொண்டனர்.

ஒரு மாணவர் பலி
இதில் மஹேந்தர் என்ற மாணவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ரவி தேஜா என்ற மாணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவருக்கு சம்பந்தம்
இதில் புதிய திருப்பமாக ஒரு மூன்றாவது மாணவனும் இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பது தெரியவந்து உள்ளது. அந்த மாணவரும் மாணவியை காதலித்தாரா? தனது காதலுக்கு இடையூறாக இருந்ததால் இரண்டு மாணவர்களையும் தீ வைத்து கொளுத்தினரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பீர் பாட்டில்கள் பறிமுதல்
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்தில் இருந்து போலீசார் பீர் பாட்டில்கள் மற்றும் மொபைல் போன்களை கைப்பற்றி உள்ளனர்.

கொலையா? தற்கொலையா?
இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்காக இரண்டு மாணவர்கள் தீயில் கருகி நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மாணவரும் எதிர்காலத்தை தொலைத்துவிட்டு நிற்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications