என்னங்க நடக்குது? அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 6வது முறையாக நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.6 ஆக பதிவு
நிக்கோபார்: அந்தமான் - நிகோபார் தீவுகளில் 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது: மக்கள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகி உள்ளது.
இதோடு கணக்கிட்டால் நேற்று பிற்பகலில் இருந்து 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த தொடர் நிலநடுக்கங்கள் மக்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திற்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. கேம்பெல் பேவில் இருந்து 220 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதற்கு முன் நேற்று பிற்பகலில் இருந்து 4.9, 4.1, 5.3, 3.9, 5.5 என அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம்தான் அதிக வலுவான நிலநடுக்கம் ஆகும். இன்று அதிகாலை ஒரு மணிக்கு ஒரு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் ஒன்றரை மணி நேர இடைவெளியில் இரண்டரை மணிக்கு இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நிலநடுக்கம்: உலகம் முழுக்க கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.கடந்த சில நாட்களுக்கு முன் நியூசிலாந்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு கட்டிடங்கள், வீடுகள் இடிந்தன. ஆனால் இதனால் பெரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேபோல் பிலிப்பைன்சில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. ஆனால் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. பின்னர் ரோமானியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கொலம்பியாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் அமெரிக்காவின் ஓசன் வியூ பகுதியில் 4.8 அளவில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

டாங்கோவில் 5.3 ரிக்டர் அளவில் கூடுதலாக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவிலும் சிறிய அளவில் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக துருக்கியில் கடந்த சில நாட்களுக்கு முன் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
துருக்கியில் 50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிலநடுக்கம் காரணமாக படுகாயம் அடைந்துள்ளனர். சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக 6 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்து உள்ளனர். துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன. உலக அளவில் பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து சிறிதும், பெரியதுமாக நிலநடுக்கங்கள் ஏற்படுவது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தமான் தீவின் கடல் பகுதிகளில் கடந்த தினங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது.மாயபண்டர் பகுதியில் இருந்து 67 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications