'என் தலைவனையா அடிக்கிற'.. பிரபல நடிகர் அடிவாங்குவதை தாங்க முடியாமல்.. டி.வி.யை உடைத்த குட்டி ரசிகன்
விஜயவாடா: நகரம் முதல் கிராமம் வரை அனைத்து தரப்பு மக்களையும் எளிதில் கவர்ந்து விடுபவர்கள் சினிமா நட்சத்திரங்கள். எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் தொடங்கி தற்போது விஜய்-அஜித் வரை இவர்களுக்கு இருக்கும் ஒரு சில ரசிகர்களை ரசிகர்கள் என்று அழைப்பதை விட வெறியர்கள் என்றே அழைக்கலாம்.
Recommended Video
இந்த வெறித்தனமான ரசிகர்கள் நடிகர்களின் படங்களை, பெயர்களை கைகளில் பச்சை குத்திக் கொள்வது, ஒரு படத்தையே பலமுறை பார்ப்பது என்று இவர்கள் செய்யும் செயலுக்கு அளவே இல்லை. இப்படிப்பட்ட ஒரு வெறித்தனமான குட்டி ரசிகரை பற்றித்தான் பார்க்க போகிறோம்.

தூக்குடு படத்தால் வந்த வினை
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் குருவையா. இவரது மனைவி புஷ்பலதா. ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்வுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அங்கு குருவையாயின் 7 வயது மகன் விராட் 'தூக்குடு' என்ற தெலுங்கு படத்தை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அடி வாங்கிய சோனு சூட்
சிறுவன் விராட் பிரபல நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகன். 'தூக்குடு' படத்தின் ஒரு சண்டை காட்சியில் படத்தின் ஹீரோவான தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, படத்தின் வில்லன் சோனு சூட்டுவை அடித்து துவம்சம் செய்வதுபோல் காட்சிகள் அமைந்துள்ளது. தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் அடி வாங்குவதை குட்டி ரசிகன் விராட்டால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

''தலைவனையா அடிக்கிற''
தொடர்ந்து மகேஷ் பாபு, சோனு சூட்டுவை அடித்து கொண்டிருந்ததால் ஆத்திரத்தின் உச்ச்சிக்கு சென்றான் சிறுவன் விராட். ஒரு கட்டத்தில் கடும் கோபம் அடைந்த அவன் வீட்டுக்கு வெளியே ஓடிச் சென்று கல் ஒன்றை எடுத்து வந்தான். ''என் தலைவனையாடா நீ அடிக்கிற.. உன்னை என்ன செய்றேன் பாரு'' என்று கூறியபடியே மகேஷ் பாபுவை நோக்கி கல்லை எறிந்தான்.

டி.வி போச்சே..
இதனால் டி.வி உடையும் சத்தம் கேட்டதும் உறவினர்கள் விரைந்து வந்தனர். அதன்பிறகு தான் சிறுவன் சோனு சூட்டுக்காக டி.வி.யை உடைத்தது தெரியவந்தது. இந்த செய்தி சமூக வலைதலங்களில் வைரலானது. இது தொடர்பான செய்தியை சிலர் நடிகர் சோனு சூட்டுவின் டுவிட்டர் பக்கத்தில் டேக் செய்துள்ளனர். இதனை பார்த்த சோனு சூட், '' இதுபோன்று டிவியை உடைக்க வேண்டாம். பிறகு உங்கள் தந்தை என்னிடம்தான் டி.வி. வங்கி கொடுக்க சொல்லுவார்'' என்று தனது ரசிகனான சிறுவன் விராட்டுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications