"சார் விடுங்க.. செம குளிரு தூக்கம் வருது.." கோயிலில் திருட வந்த இடத்தில் படுத்து தூங்கிய திருடன்!
போபால்: மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் திருட வந்த இடத்தில் படுக்கையை பார்த்து குஷி அடைந்த திருடன் அங்கேயே படுத்து உறங்கிய காமெடி சம்பவம் நடந்தேறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரில் லால்பாய்- புல்பி மாதா கோயில் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் அந்த கோவிலைத் திருடுவதற்காக நோட்டமிட்டுள்ளார்.
பின்னர் நேற்று இரவு அந்த கோயிலின் நடை சாத்திய பிறகு சுற்றுச்சுவர் வழியாக கோயிலில் எகிறி குதித்து உள்ளே நுழைந்தார்.

திருட நினைத்த திருடன்
அப்போது கோயிலின் பூட்டை உடைத்த அந்த திருடன் கோயிலுக்குள் சென்றார். அப்போது அங்கிருந்த நகைகளை எடுத்துக் கொள்ளாமல் அங்கு ஒரு படுக்கை இருந்ததை கண்டார். உடல் மிகவும் சோர்வாக இருந்ததால் அவர் அந்த படுக்கையில் படுத்துவிட்டு பின்னர் திருடலாம் என நினைத்துள்ளார்.

அசந்து தூங்கிய திருடன்
ஆனால் கடுங்குளிரால் அவரது போறாத வேளை, அசந்து தூங்கிவிட்டார். காலையில் வழக்கம் போல் கோயில் நிர்வாகி கோயிலை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மெதுவாக உள்ளே சென்று பார்த்தார்.

திருடன்
அப்போது படுக்கையில் அந்த திருடன் படுத்திருப்பதை கண்டார். உடனே வெளியே வந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போதும் அந்த திருடன் படுக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டே இருந்தார்.

ஸ்டேஷனிலும் தூங்கி வழிந்த திருடன்
பின்னர் ஒரு குச்சியால் தட்டி அந்த திருடனை போலீஸார் எழுப்பினர். அப்போது திருடன் சார் பயங்கரமாக குளிர்கிறது. கொஞ்ச நேரம் தூங்க விடுங்கள் என்றாராம். இதனால் போலீஸார் எப்படி கவனிக்க வேண்டுமோ அப்படி அந்த நபரை கவனித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

தெளிந்த பின்னர் விசாரணை
அங்கும் அந்த திருடன் தூக்கம் தெளியாமலேயே இருந்தார். தற்போது அந்த திருடனின் பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களும் போலீஸாருக்கு தெரியவில்லை. அவரது தூக்கம் தெளிந்த பிறகுதான் அவர் யார், பெயர் என்ன போன்ற விவரங்கள் தெரியவரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications