வாக்கிங் போன தூர்தர்ஷன் பெண் ஊழியர் மீது விழுந்த தென்னை மரம்.. வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: வாக்கிங் சென்ற தூர்தர்ஷன் முன்னாள் தொகுப்பாளர் மீது தென்னை மரம் விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

மும்பை செம்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டின் அருகே காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த தென்னை மரம் ஒன்று அவர் மீது விழுந்தது.

A tree fell on a woman who is a former Doordarshan anchor in Mumbai

இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக சென்ற மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் பலத்த காயமடைந்துள்ள அவர் தற்போது ஐசியுவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த பெண் தூர்தர்ஷன் முன்னாள் தொகுப்பாளர் ஆவார். அவர் மீது மரம் விழும் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In a shocking incident a tree fell on a woman in Mumbai knocking her down. Woman who is a former Doordarshan anchor was on a morning walk in Chembur when the incident happened
Please Wait while comments are loading...