கழுதையின் வாயில் புல்லுடன் ஒரு பாம்பு.. இரண்டும் நடத்திய உயிர் போராட்டம். அரிய சம்பவம் நடந்தது என்ன?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் பாம்புக்கும் கழுதைக்கும் இடையே பெரும் சண்டை நடைபெற்றது. இந்த அரிய வீடியோவை பார்த்து என்ன நடந்தது என தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக கீரிக்கும் பாம்புக்கும் சண்டை ஏற்படும். இதைதான் நாம் கேள்விப்பட்டுள்ளோம். அது போல் சில நேரங்களில் சில விலங்குகள் தங்கள் இனங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்ளும்.
அதையும் பார்த்துள்ளோம். ஆனால் கழுதைக்கும் பாம்புக்கும் இடையே சண்டை நடந்துள்ளதை பார்த்துள்ளீர்களா, கழுதை மிகவும் சைலண்டாச்சே அது எப்படி வைலண்டா பாம்புடன் சண்டை போட்டதுனு பார்க்கிறீர்களா?

ஆற்றங்கரை
ஆம்! ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் மாஹி ஆற்றங்கரையில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றது. ஒரு புல்வெளியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருக்கிறது. அப்போது அந்த புற்களுக்கிடையே இருந்த பாம்பு, கழுதையின் வாயில் மாட்டிக் கொண்டது. கழுதையும் பாம்பை புல் என நினைத்து மேய்ந்துவிட்டது.

வெகுநேரம்
எதையோ விழுங்கிவிட்டதை அறிந்த கழுதை அங்கும் இங்கும் ஓடுகிறது. வெகு நேரமாக பாம்பு கழுதை வாயில் இருந்து வெளியேற முயற்சிக்கிறது. அது போல் கழுதையும் பாம்பை வாயிலிருந்து விட முயற்சித்தும் அது முடியவில்லை. பாம்பின் பாதி உடல் வெளியே தெரியும்படி இருக்கிறது. தலையை அசைத்து பார்க்கிறது.

உயிர் போராட்டம்
எனினும் பாம்பை வெளியேற்ற முடியவில்லை. இரண்டுமே வாழ்க்கை போராட்டத்தை நடத்தின. அப்போது வேறு வழியில்லாமல் கழுதை பாம்பை பல இடங்களில் கடிக்கிறது. அது போல் அந்த கழுதையின் வாயை பாம்பும் கடித்துவிடுகிறது. நீண்ட நேர உயிர் போராட்டத்திற்கு பிறகு இரண்டுமே பரிதாபமாக உயிரிழந்துவிட்டன.

வாக்கிங்
இந்த அரிய காட்சிகளை அவ்வழியாக வாக்கிங் சென்றவர் படம் பிடித்துள்ளார். கழுதைக்கும் பாம்புக்கும் இடையே உயிரை காக்க நடந்த போராட்டம் இப்படி பாதியிலேயே முடிந்துவிட்டது. இந்த வீடியோவும் புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரலாகின.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications