கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல முயற்சி! உயிர் போகாததால் மனைவி செய்த கொடூரச் செயல்!
கேரளாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை துடிக்க துடிக்க கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை துடிக்க துடிக்க கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தானுரைச் சேர்ந்தவர் சாகத். 34 வயதான இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார்.
இவருக்கு 30 வயதில் சவுஜத் என்ற மனைவியும் 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 32 வயது பஷீருடன் கள்ளக்காதலில் விழுந்தார் சவுஜத்.
[துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றாரா அபிராமி.. திடுக் தகவல் ]

தனிமையில் இனிமை
கணவர் வியாபாரத்திற்கு சென்ற பிறகு கள்ளக்காதலன் பஷிருடன் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் இனிமை கண்டு வந்துள்ளனர்.

போனில் கள்ளக்காதல்
இந்நிலையில் பஷீர் வேலை விஷயமாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இருப்பினும் இருவரின் கள்ளக்காதலும் போனில் ஜரூராய் தொடர்ந்தது.

கணவரை கொல்ல முடிவு
ஆனால் பிரிவின் வேதனையை தாங்க முடியாத கள்ளக்காதல் ஜோடிகள் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதற்கு சவுஜத்தின் கணவர், சாகத் தடையாக இருந்ததால் இருவரும் சாகத்தை கொலை செய்ய முடிவு செய்தனர்.

இரவோடு இரவாக
இதற்கு பஷீரின் நண்பரும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த பஷீர் நண்பருடன் சேர்ந்து இரவோடு இரவாக சவுஜத்தின் வீட்டிற்கு சென்றார்.

இரும்புக்கம்பியால் தாக்குதல்
கள்ளக்காதலன் வருகைக்காக கதவை திறந்து வைத்து காத்திருந்தார் சவுஜத். சொன்னபடியே டான் என வந்த பஷீர் தூங்கிக்கொண்டிருந்த சாகத் தலையில் இரும்புக்கம்பியால் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கினார் சாகத்.

மீன் வெட்டும் அரிவாள்
அவர் இறந்துவிட்டதாக நினைத்த பஷீர் உடனடியாக இடத்தை காலி செய்தார். பஷீர் சென்றவுடன் சாகத் மயங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்த மனைவி சவுஜத், வீட்டில் இருந்த மீன்வெட்டும் அரிவாளால் கணவரின் கழுத்தை அறுத்து துண்டாக்கினார்.

மனைவியின் நாடகம்
இதில் துடிதுடித்து உயிரிழந்தார் சாகத். இதைத்தொடர்ந்து மர்மநபர்கள் வீடு புகுந்து தனது கணவரை கொன்று விட்டதாக நாடகமாடியுள்ளார் சவுஜத். தகவலறிந்து வந்த போலீசார் சாகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிடுக்கிப்பிடி விசாரணை
கொலை தொடர்பாக மனைவி சவுஜத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

ஒப்புக்கொண்ட மனைவி
அதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ கணவர் இடையூறாக இருந்ததால் அவரை கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார் சவுஜத். இது தொடர்பாக பஷீரின் நண்பரை கைது செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள பஷீரை தேடி வருகின்றனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications