துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றாரா அபிராமி.. திடுக் தகவல்
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குன்றத்தூர் அபிராமி சிறைக்குள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குன்றத்தூர் அபிராமி சிறைக்குள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த அபிராமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் பிரியாணி டெலிவரி செய்ய வரும் சாக்கில் அபிராமியுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார் சுந்தரம்.
சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் அபிராமியின் குடும்பத்தினருக்கு தெரியவரவே அவரை கண்டித்துள்ளனர். சுந்தரத்துடன் பழகவும் தடைவித்துத்துள்ளனர்.

கள்ளக்காதலன் ஆலோசனை
இதனால் ஆத்திரமடைந்த அபிராமி சுந்தரத்திடம் கூறி அழுது புலம்பினார். இதனைக்கேட்டு வருத்தப்பட்ட சுந்தரம் குழந்தைகள் மற்றும் கணவரை கொன்று விட்டால் எங்காவது போய் சந்தோஷமாக வாழலாம் என ஆலோசனை கூறியுள்ளார்.

கள்ளக்காதல் ஜோடி திட்டம்
சுந்தரத்தின் பேச்சைக் கேட்ட அபிராமி கடந்த ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் பாலில் விஷம் கலந்தும் கழுத்தை நெரித்தும் துடிக்க துடிக்க கொன்றார். கணவரை கொல்ல கள்ளக்காதல் ஜோடி போட்ட திட்டம் தோல்வியடைந்தது.

பொறி வைத்து பிடித்த போலீஸ்
பொறி வைத்து பிடித்த போலீஸ் இதனால் இரவோடு இரவாக நாகர்கோவிலுக்கு எஸ்கேப்பானார் அபிராமி. அவரை கள்ளக்காதலனை வைத்தே பொறி வைத்து பிடித்தனர் போலீசார்.

கதறிய அபிராமி
தற்போது அபிராமியும் சுந்தரமும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நீதிமன்ற காவல் வரும் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தன்னை ஜாமீனில் வெளியே எடுக்குமாறு தனது குடும்பத்தாரிடம் கூறும்படி சிறை அதிகாரிகளிடம் கதறினார் அபிராமி.

மன உளைச்சல்
ஆனால் அபிராமியின் குடும்பத்தினர் அவரை ஜாமீனில் வெளியே எடுக்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். குழந்தைகளையும் கொன்று, கணவர், கள்ளக்காதலன் பெற்றோர் என அனைவரையும் இழந்துள்ள அபிராமி கடுமையான மன உளைச்சலில் உள்ளதாக தெரிகிறது.

தற்கொலை முயற்சி?
இந்நிலையில் அபிராமி சிறைக்குள் திடீரென தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பட்டாவால் கழுத்தை நெரித்து அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

எதற்காக தற்கொலை முயற்சி?
இதனைக் கண்ட சிறை வார்டன் துப்பட்டாவை பிடுங்கி அபிராமியை காப்பாற்றியுள்ளார். குடும்பத்தினர் ஒதுக்கியதால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது குழந்தைகளை கொன்ற குற்ற உணர்வு தாங்காமல் அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications