பிரியாணி நல்லா இல்லையாம்.. பொண்டாட்டிய அடித்து விரட்டிய புருஷன்!
தெலுங்கானாவில் சரியாக பிரியாணி செய்யாத மனைவியை கணவன் வீட்டை விட்டு அடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாரங்கல்: தெலுங்கானாவில் ருசியாக பிரியாணி செய்யாத மனைவியை கணவன் வீட்டை விட்டு அடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள வர்தானேப்பேட்டையை சேர்ந்தவர் மானசா. இவரது கணவர் ராஜேந்திர பிரசாத்.
ராஜேந்திர பிரசாத் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டு கூட நிறைவடையவில்லை.
இந்நிலையில் இரண்டாவது முறையாக மனைவி மானசாவை வீட்டை விட்டு அடித்து விரட்டியுள்ளார் கணவர் ராஜேந்திர பிரசாத். இதனால் விரக்தியடைந்த அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பிரியானி ருசியா இல்லை
குடிக்கு அடிமையான ராஜேந்திர பிரசாத் நாள்தோறும் குடித்துவிட்டு பிரியாணி செய்து தரும்படி மானசாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். மானசாவுக்கு அந்தளவுக்கு சமைக்க வராதாம். இதனை காரணமாக வைத்து நாள்தோறும் அவரை சித்ரவதை செய்துவந்துள்ளார் ராஜேந்திர பிரசாத்.

கடந்த நவம்பரில் திருமணம்
மேலும் ராஜேந்திர பிரசாத்தின் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டும் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் இவர்களுக்கு திருமணம் ஆகியுள்ளது.

ஜனவரியில் விரட்டியடிப்பு
ஆனால் ஜனவரி மாதமே ராஜேந்திரபிரசாத் மானசாவை வீட்டை விட்டு அடித்து விரட்டியுள்ளார். இதையடுத்து பெரியோர்கள் தலையீட்டால் கடந்த ஜூன் மாதம்தான் மீண்டும் கணவரின் வீட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மானசா.

நேற்றும் அடித்த விரட்டிய கணவர்
இந்நிலையில் நேற்று குடித்துவிட்டு வந்த ராஜேந்திர பிரசாத் அவரை பிரியாணி செய்து தருமாறு கூறியிருக்கிறார். பின்னர் பிரியாணி ருசியாக இல்லை எனக்கூறி அவரை சரமாரியாக அடித்து துன்புறுத்திய ராஜேந்திர பிரசாத் அவரை வீட்டை விட்டே விரட்டியுள்ளார்.

குடும்பத்தினருக்கு கவுன்சிலிங்
இதனால் நொந்துபோன மானசா கணவரின் வீட்டின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் மானசா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ராஜேந்திர பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.

பிரியாணிக்காக துன்புறுத்தல்
மேலும் மானசாவை துன்புறுத்துவதை நிறுத்திக்கொள்ளாவிட்டால் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளனர். பிரியாணி ருசியாக செய்யவில்லை எனக்கூறி மனைவியை கணவனே குடும்பத்துடன் சேர்ந்து அடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications