துப்பாக்கி மேல் துப்பாக்கி வாங்கிக் குவிக்கும் காங்கிரஸ் பெண் வேட்பாளர்

Subscribe to Oneindia Tamil

ஜோத்பூர்: ஜோத்பூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சந்திரேஷ் குமாரிக்கு நகைகளை விட துப்பாக்கிகள் தான் மிகவும் பிடிக்குமாம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சந்திரேஷ் குமாரி போட்டியிடுகிறார். அவர் ஜோத்பூர் எம்.பி.யாக இருந்த கடநத் 5 ஆண்டுகளில் நகை வாங்கி குவிக்கவில்லை மாறாக துப்பாக்கிகள் வாங்கியுள்ளார்.

அவர் கடந்த 5 ஆண்டுகளில் தனது பெயரில் 3 துப்பாக்கிகளும், தனது கணவர் பெயரில் 3 துப்பாக்கிகளும் வாங்கியதாக வேட்புமனு தாக்கலின்போது தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிகளை வாங்க ரூ.14 லட்சம் செலவு செய்துள்ளார். அவரிடம் ரூ.24.33 லட்சம் மதிப்புள்ள 811.1 கிராம் தங்கமும், ரூ. 13.50 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளும், அவரது கணவரிடம் ரூ.41 லட்சம் மதிப்புள்ள 1,350 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.9 லட்சம் மதிப்புள்ள 20 கிலோ வெள்ளி நகைகளும் உள்ளன.

சந்திரேஷ் குமாரியிடம் ரூ.30.78 கோடி மத்திப்புள்ள சொத்துக்கள் உள்ளன. கடந்த முறை அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அவரிடம் ரூ.13.20 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தன. அவர் தன்னிடம் வாகனம் எதுவும் இருப்பதாக தெரிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+