அமைச்சர் பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோ விவகாரத்தில் ட்விஸ்ட்.. அதிரடி திருப்பம்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தாவுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடந்த வீடியோ உரையாடலின் ஆபாசமான வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அந்த வீடியோ போலியானது என்று அமைச்சர் குப்தா மறுத்துள்ளார். எனினும் இதை ஏற்காத பாஜக, குப்தா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் வலியுறுத்தி உள்ளது.

A women explain about Jharkhand Health Ministers Obscene Video

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்னா குப்தா சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார்.

சமீபத்தில் பன்னா குப்தா பெண் ஒருவருடன் ஆபாசமாக பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பா.ஜ.க எம்.பி., நிஷிகாந்த் துபே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதற்கு அமைச்சர் பன்னா குப்தா விளக்கம் அளித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், " என்னுடைய அரசியல் எதிரிகள் சிலர், என் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும், நன்கு திட்டமிட்டு எனக்கு எதிராக சதி திட்டம் தீட்டி, வேண்டுமென்றே ஒரு போலி மற்றும் திருத்தப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளன.
இந்த வீடியோவை பார்த்தாலே இது போட்டோ ஷாப் அல்லது வேறு ஏதேனும் எடிட்டிங் வீடியோ என்று தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

A women explain about Jharkhand Health Ministers Obscene Video

இந்த கேவலமான வேலையை ஏதாவது ஒரு ஆப் மூலம் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக நான் போலீசில் புகார் அளித்துள்ளேன். போலீசார் விசாரணை நடத்திய பிறகு, உண்மை வெளிவரும். இந்த போலியான மற்றும் எடிட் செய்யப்பட்ட வீடியோ மூலம் என்னை சிக்க வைக்க முயன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சத்யமேவ ஜெயதே!" இவ்வாறு அமைச்சர் பன்னா குப்தா விளக்கம் அளித்துள்ளார.

இதனிடையே விளக்கத்தை ஏற்காத பாஜக, அமைச்சர் பன்னா குப்தா கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறத. இது ஒருபுறம் எனில், பன்னா குப்தாவின் ஆபாச வீடியோ விவகாரம் தற்போது அதிர்ச்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் இருப்பதாக கூறப்பட்ட ஆருஷி வந்தனா என்ற பெண் தனது கணவர் முன்னாள் என்எஸ்யூஐ மாநிலத் தலைவர் இந்திரஜித் சிங்குடன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

ஆருஷி வந்தனா இதுபற்றி கூறும் போது, கடந்த ஏப்ரல் 24ஆம் தனது படத்தைப் போட்டு ஆட்சேபனைக்குரிய கருத்துகள் வெளியிட்டுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரசில் இருக்கிறேன். கட்சியின் நிகழ்ச்சிகளுக்காக அமைச்சர்களை சந்தித்து வருகிறேன். பன்னா குப்தாவுடன் தன் சகோதரன் போன்றவர் அவருக்கு நான் ராக்கி கட்டி உள்ளேன். இந்த வீடியோ விவகாரம் அவரது புகழை கெடுத்து விட்டது. இந்நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளேன் என்று ஆருஷி வந்தனா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+