எல்.பி.ஜி மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை… வீரப்ப மொய்லி
டெல்லி: உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்காதவரை, சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் அட்டை காட்டாயமில்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.
சமையல் எரிவாயு மானியத்தை பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக பணமாக செலுத்தும் திட்டத்தை அமல்படுத்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி நாடு முழுவதும் 97 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இதில் முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 19 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்காக ஆதார் அடையாள அட்டையுடன் இணைந்த வங்கி கணக்கு கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் குடிநீர், கேஸ் இணைப்புகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியத்திட்டங்களை பெற ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், அரசின் மானிய திட்டங்களை பெற ஆதார் அடையாள அட்டை கட்டாய மில்லை என தீர்ப்பளித்தனர்.
இதைத்தொடர்ந்து சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்த 19 மாவட்டங்களிலும் இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதன்படி ‘சமையல் எரிவாயு மானியம் பெற, உச்ச நீதிமன்றம் அனுமதிக்காத வரை ஆதார் அட்டை கட்டாயமில்லை' என மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications