அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி: அரசியன் நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமானது அல்ல என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே அடையாள அட்டை வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் உதவிகள் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல் ஊதியம் பெறுவது, திருமணப் பதிவு, சொத்துகள் பதிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க சில மாநிலங்கள் திட்டமிட்டுள்ளதற்கும் எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உள்பட ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும், அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசும் வலியுறுத்தி இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செலமேஸ்வர், எஸ்.ஏ. போப்டே, சி.நாகப்பன் ஆதார் அட்டை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பினர்.

அதன் பிறகு வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டனர். இன்றைய விசாரணையின் முடிவில் அரசின் நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமல்ல; ஆதார் எண் கட்டாயம் அல்ல என்பதை மக்களுக்கு ஊடகங்கள் மூலம் அரசு தெரிவிக்க வேண்டும்.
ஆதாருக்காக சேகரிக்கப்படும் விவரங்களை அந்நிறுவனம் பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது; பொதுவிநியோகத் திட்டம், சிலிண்டர் வழங்கலுக்கு ஆதார் எண்ணை அரசு கேட்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications