பெங்களூரு மருத்துவமனை கசாயம் வேலை செய்கிறது... கெஜ்ரிவால் இருமல் போயே போச்சு!
பெங்களூரு: தொடர் இருமல், அதிகப்படியான சுகர் காரணமாக, பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இருமல் மற்றும் சுகர் நோய் சிகிச்சைக்காக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் தற்போது முன்பை விட உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

கடந்த வாரம் அட்மிட்
டெல்லி தேர்தல் துவங்கியது முதல் முதல்வரானது வரை ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இருமல் காரணமாக தொடர்ந்து சிரமப்பப்டடு வந்தார். இவருக்கு சிறப்பு சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் ( வியாழக்கிழமை) பெங்களூரு புறநகரிலுள்ள ஜிந்தால், இயற்கை வைத்திய இன்ஸ்ட்டிடியூட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

10 நாள் சிகிச்சை
இவருக்கு 10 நாள் இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிகிறது. மண் தெரபி, யோகா பயிற்சிகளும் அவருக்கு அளிக்கப்படுகின்றன.

முன்னேற்றம்
தொடர் சிகிச்சையில் இருக்கும் கெஜ்ரிவால் உடல் நலம் தேறியுள்ளதாக இந்த மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபினா நந்தகுமார் கூறினார். கெஜ்ரிவால் உடல் நிலை குறித்து அவர் கூறியது; சிகிச்சை கெஜ்ரிவாலுக்கு நல்ல பலன் அளித்துள்ளது. இவருக்கு செலுத்தப்படும் இன்சுலின் அளவு குறைந்துள்ளது. சுகர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இருமல் மிக குறைந்துள்ளது. கடந்த முறை இருந்த இருமலை விட தற்போது வெகுவாக குறைந்திருப்பதை அவர் உணர்கிறார். நல்ல நிலைக்கு விரைவில் வருவார். இவ்வாறு பாபினா கூறினார்.

சுகர் அளவு குறைந்துள்ளது
கெஜ்ரிவாலுக்கு இருமல் மட்டுமின்றி, சுகர் அளவும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. கடந்த சில நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சையிலேயே, அவருக்கு சுகர் அளவும் குறைந்துள்ளது நல்ல முன்னேற்றம்தான் என்று டாக்டர்கள் கூறினர்.

கெஜ்ரிவால் டயட்
கெஜ்ரிவாலுக்கு பழ ஜூஸ், கசாயம், சப்பாத்தி, சூப்புகள், அவித்த காய்கறிகள் போன்றவை மட்டுமே உணவாக வழங்கப்பட்டு வருகிறது.

பெற்றோருக்கும் சிகிச்சை
கெஜ்ரிவாலின் பெற்றோரும், தங்கள் மகனுடன் சேர்ந்து, இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகர் உள்ளிட்ட வேறு உடல் உபாதைகளுக்காக அவர்களுக்கு மூத்த மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications