லோக்சபா தேர்தலிலும் களம் காண ஆம் ஆத்மி கட்சி தீர்மானம்!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பெரும் புயலைக் கிளப்பி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி வரும் லோக்சபா தேர்தலிலும் களம் இறங்க தீர்மானித்துள்ளது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் முன்னணி பாத்திரம் வகித்தவர் அர்விந்த் கெஜ்ரிவால். இன்று நாட்டின் திருப்பங்களை ஏற்படுதக் கூடிய அரசியல் தலைவராக உருவெடுத்திருக்கிறார்.
டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெளிப்படுத்திய விஸ்வரூபத்தால் பாஜகவும் காங்கிரஸும் கதி கலங்கிப் போய்கிடக்கின்றன. இந்த விஸ்வரூபத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில அரசியலில் தமது கவனத்தை ஆம் ஆத்மி கட்சி செலுத்தியிருக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி களம் இறங்குவது குறித்து விவாதித்திருக்கின்றனர்.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் போட்டியிடாவிட்டாலும் கணிசமான தொகுதிகளில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாம். இருப்பினும் கட்சி கட்டமைப்புக்கு மீறிய நடவடிக்கையாக இருந்துவிடுமோ என்ற அச்சமும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடத்தில் இருப்பதாக தெரிகிறது.
இதனால் நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் குறிப்பாக கட்சி வலுவாக உள்ள மாநிலங்களில் கவனம் செலுத்தவும் அக்கட்சி தீர்மானித்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications