மகனுக்காக கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட அமீர் கான்!
மும்பை: தன் மகன் ஆசாத்திற்காக நடிகர் அமீர் கான் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமிட்டு, பரிசுகளை வாரி வழங்கியுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக இருப்பவர் அமீர்கான். வெள்ளித் திரை மூலம் கோடானுகோடி ரசிகர்களை மகிழ வைக்கும் இவர், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது மகன் ஆசாத்தை மகிழ்விக்க விரும்பினார்.
இதற்காக ஆசாத் மற்றும் அவனது நண்பர்களை வைத்து வீட்டில் கிறிஸ்துமஸ் விழா ஒன்றை நடத்தினார்.

கிறிஸ்துமஸ் தாத்தா...
இதில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் அமீர்.

பரிசுப் பொருட்கள்...
அதோடு, விருந்தில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் அவர்.

பேஸ்புக்...
இதுதொடர்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் சில படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளார். கூடவே, "எங்கள் வீட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவுக்காக சாண்டா கிளாஸ் வேடத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடித்துவிட்டு வந்தேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

20000 லைக்ஸ்...
அமீர்கானின் இந்தப் பதிவை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications