மும்பை ஆம் ஆத்மி 'மொய் விருந்தில்' ரூ.93 லட்சம் வசூல்: அடுத்தது பெங்களூரில்
மும்பை: டெல்லி சட்டசபை தேர்தலுக்கு நிதி திரட்ட மும்பையில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய மொய் விருந்தில் ரூ.93 லட்சம் வசூலாகியுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிதி திரட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மும்பையில் வியாழக்கிழமை இரவு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விருந்தில் வைர வியாபாரிகள், வங்கியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒரு தட்டு சாப்பாட்டின் விலை ரூ.20 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

விருந்து பற்றி கட்சி தலைவர் ப்ரீத்தி சர்மா மேனன் கூறுகையில்,
நேற்று இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியில் டோனர் பாஸ் மூலம் ரூ.36 லட்சமும், காசோலை மூலம் ரூ. 36 லட்சமும் கிடைத்துள்ளது. மேலும் எங்கள் தொண்டர்கள் ரூ.21 லட்சம் நிதி திரட்டியுள்ளனர். ஆக மொத்தம் விருந்து மூலம் ரூ. 93 லட்சம் கிடைத்துள்ளது. அடுத்த விருந்து நிகழ்ச்சி பெங்களூரில் நடத்தப்படும். நேற்றைய விருந்துக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. விருந்தில் சில வைர வியாபாரிகள், வேலை பார்க்கும் இளைஞர்கள், சில பாலிவுட் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷ்டிரா பிரிவு அடுத்த 2 மாதங்களில் ரூ.5 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. கட்சிக்கு தாராளமாக நிதி அளிக்குமாறு கெஜ்ரிவால் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications