டெல்லிக்கு மாநில அந்தஸ்து... அப்புறம் பார்க்கலாம்.. கெஜ்ரிவாலின் கோரிக்கைக்கு மத்திய அரசு பதில்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கைக்கு அவசரம் காட்டத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67ல் வெற்றி பெற்று, அங்கு ஆட்சி அமைத்துள்ளது ஆம் ஆத்மி. டெல்லி முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுள்ளார்.

AAP government has too many promises to fulfill: BJP

டெல்லி முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், பொதுமக்களிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து பெற தனது அரசு பாடுபடும். இந்த கோரிக்கையை ஏற்கனவே பாஜக ஆதரித்துள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கான தருணம் வந்துவிட்டது எனப் பேசினார்.

இந்தநிலையில் கெஜ்ரிவாலின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘ஆம் ஆத்மி கட்சி ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு அவசரம் காட்ட தேவையில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+