டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விசாரணை கமிஷன் முடிவில் பின்வாங்க மாட்டோம்- கேஜ்ரிவால் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனிநபர் ஆணையத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் நீதமன்றத்தை நாடி அதற்கான தீர்வை தேடிக் கொள்ளட்டும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த காலத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்துள்ளார்.

AAP government will not step back from DDCA decision

டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் விசாரணை கமிஷன் அமைப்பதற்கான அதிகாரம் அம்மாநில அரசுக்கு இல்லை என்று உள்துறை அமைச்சகத்துக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் கடிதம் எழுதியுள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் கேஜ்ரிவாலுக்கும், நஜீப் ஜங்குக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

இந்நிலையில் விசாரணை கமிஷன் அமைத்த முடிவில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்று அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்த விவகாரத்தில், உள்துறை அமைச்சகத்துக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடி அதற்கான தீர்வை தேடிக் கொள்ளட்டும். ஜனநாயக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசுக்கு விசாரணை கமிஷன் அமைப்பதற்கான அதிகாரம் இருக்கிறது.

எனவே சட்டவிரோதமான முறையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவிக்க முடியாது. இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+