ஹரியானாவில் மும்முனை போட்டி.. வினேஷ் போகத்திற்கு எதிராக WWE சாம்பியனை களமிறக்கியது ஆம் ஆத்மி
சண்டிகர்: ஹரியானாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினேஷ் போகத், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். இவருக்கு எதிராக இந்தியாவின் முதல் WWE வீராங்கனை கவிதா தலாலை வேட்பாளராக அறிவித்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.
வினேஷ் போகத்திற்கு எதிராக இந்தியாவின் முதல் WWE வீராங்கனை கவிதா தலாலை வேட்பாளராக அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி More ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து கவிதா தலால் போட்டி

ஹரியானாவில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என காங்கிரஸ் தீவிரமாக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. இந்த பிளானின் மாஸ்டர் மூவ்தான், வினேஷ் போகத்தை காங்கிரஸில் இணைப்பது. மல்யுத்த போட்டியில் பயிற்சி பெறும் பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழந்தபோது, அதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்ததில் வினேஷ் போகத் பங்கு மிகப்பெரியது.
இந்த போராட்டத்தின் பின்னால், நாடே அணி திரண்டது. இப்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மறுபுறம் ஒலிம்பிக் போட்டியில், உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்திய போகத், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எடை இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தங்க பதக்கம் மிஸ்ஸானது. எல்லா விஷயத்திலும் போராடிய வினேஷ் மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். இந்நிலையில்தான் அவரை காங்கிரஸ் கட்சியில் இணைத்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன.
கடந்த செப்.4ம் தேதி ஹரியானா வந்திருந்த ராகுல் காந்தியை வினேஷ் போகத் சந்தித்தார். அதனை தொடர்ந்து ரயில்வே துறையில் தான் வகித்து வந்த பதவியை வினேஷ் போகத் ராஜினாமா செய்தார். பின்னர் செப். 6ம் தேதி அவர் அதிகாராப்பூர்வமாக காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இதனையடுத்து, பாஜக மீதான விமர்ச்னங்களை கூர்மையாக வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக, ஒலிம்பிக் போட்டியில் தான் தோற்ற போது பொருப்பாளராக இருந்த பி.டி.உஷா தன்க்காக எதுவும் செய்யவில்லை என்றும், அங்கு வந்தும் அரசியல் செய்தார் எனவும் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து இன்று ஜூலானா தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
ஹரியானாவில் கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் ஆம் ஆத்மி கைகோர்த்திருந்தது. சட்டமன்ற தேர்தலுக்கும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் எழுந்தன. ஆம் ஆத்மி கட்சி தரப்பில், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஆனால், 7 இறுதி செய்து லாக் செய்தது காங்கிரஸ். ஆம் ஆத்மி ஒத்துவரவில்லை. எனவே கூட்டணி இல்லாமல் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிடும் வினேஷ் போகத்துக்கு எதிராக, இந்தியாவின் முதல் WWE வீராங்கனை கவிதா தலாலை வேட்பாளராக அறிவித்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. எனவே இந்த தொகுதியில் மூம்முனை போட்டி தீவிரமடைந்திருக்கிறது.
இந்தி மொழி, கலாச்சார காவலர்கள், மாட்டிறைச்சி என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றதுதான் ஹரியானா. சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் மாட்டிறைச்சி கடத்தல் விவகாரங்களில் ஹரியானாவின் பெயர் பலமாக அடிபட்டிருந்தது. இப்படி இருக்கையில் விரைவில் இந்த மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
இம்மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளை அனைத்திற்கும், அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications