டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி முயற்சி! காங்கிரஸ் எதிர்ப்பு!!
டெல்லி: டெல்லி மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை ஆம் ஆத்மி மேற்கொண்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஆதரவளிக்கப்போவதில்லை என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 28 இடங்களை பிடித்து ஆம் ஆத்மி சாதனை படைத்தது. பின்னர் பல்வேறு இழுபறிக்குப்பின், காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சியமைத்தார். ஆனால் நிலைக்கவில்லை.

ஜன்லோக்பால் மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்ற முடியாததை தொடர்ந்து, அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அக்கட்சியின் 49 நாள் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் சட்டசபை கலைக்கப்படவில்லை எனினும் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தக்கோரி, அரவிந்த் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தநிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 7 தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றியதுடன், 60 சட்டசபை தொகுதிகளில் அக்கட்சி முன்னணி வகித்துள்ளது.
10 தொகுதிகளில் மட்டுமே ஆம் ஆத்மி முன்னிலை பெற முடிந்தது. இது ஆம் ஆத்மி கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால் தற்போதையை நிலையில் டெல்லியில் மீண்டும் தேர்தலை சந்திக்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் விரும்பவில்லை.
எனவே காங்கிரஸ், அல்லது பாரதிய ஜனதா ஆதரவுடன் மீண்டும் டெல்லியில் ஆட்சியமைக்க அவர்கள் யோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக விவாதிப்பதற்காக நேற்று சில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஒன்றையும் நடத்தினர்.
ஆனால் ஆம் ஆத்மியின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மியின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ் ஒருபோதும் ஆதரவளிக்காது என டெல்லி காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications