பஞ்சாப் சட்டசபை இடைத்தேர்தல்.. டெபாசிட்டை இழந்து பஞ்சராகிப் போன ஆம் ஆத்மி!!
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 எம்.பிக்களைக் கொடுத்தது பஞ்சாப் வாக்காளர்கள்தான். அம்மாநிலத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 21-ந் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவானவாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாட்டியாலா தொகுதியில் காங்கிரஸும் பதின்டா தொகுதியை ஆளும் சிரோமணி அகாலிதளமும் கைப்பற்றியுள்ளன.
இரண்டு தொகுதிகளிலும் ஆம் ஆத்மியும் போட்டியிட்டது. ஆனால் 2 தொகுதிகளிலுமே டெபாசிட்டை பறிகொடுத்து படுதோல்வியை சந்தித்துள்ளது ஆம் ஆத்மி.
லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆறுதல் கொடுத்த பஞ்சாப் வாக்காளர்கள் சட்டசபை தேர்தலில் அக்கட்சியை பஞ்சராக்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications