பாஜகவுக்கு 'நிபந்தனை' யோடு கூடிய ஆதரவு: வாய்திறந்த பிரசாந்த் பூஷன்
டெல்லி: டெல்லியில் பாஜக ஆட்சியமைக்க, பிரச்சினைகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி ஆதரவு தருவதற்கு பரிசீலிப்பதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
"டிசம்பர் 29-ல் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது மற்றும் டெல்லியில் ஜன சபை (பொது இடத்தில் பேரவைக் கூட்டம்) அமைப்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால், பாஜகவுக்கு நிபந்தனையின் அடிப்படையில் ஆதரவு அளிப்பது குறித்து ஆம் ஆத்மி பரிசீலிக்கக் கூடும்.
இது தன்னுடைய சொந்தக் கருத்து. இதுபற்றி ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் இன்னும் விவாதிக்கவில்லை.

இவ்வாறு தனது பேட்டியில் பிரசாந்த் பூஷன் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. பிரசாந்த் பூசன் தெரிவித்துள்ள கருத்தும் இந்த கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என தெரிகிறது.
ஆம் ஆத்மிக்கு ஆதரவு
இந்நிலையில், ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி, எவ்வித நிபந்தனையும் இன்றி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சுயேட்சையின் ஆதரவு
ஆனால், காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவின்றி ஆம் ஆத்மி கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது. டெல்லி தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ள ராம்பீர் கூறுகையில், 'நான் நரேந்திர மோடியின் ஆதரவாளன். எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் பாஜகவுக்கு ஆதரவு தரத் தயார்' என நிபந்தனை விதித்துள்ளார்.
பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்ட இவரது ஆதரவை வைத்து பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது.
கிரண்பேடி கோரிக்கை
இதற்கிடையே, அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கைகோர்க்க பாஜக முன்வர வேண்டும் என கிரண் பேடி கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லியில் ஆட்சி அமைய வேறு சில வாய்ப்புகளும் உள்ளன. காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவு தராவிட்டாலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் போது, இவ்விரு கட்சிகளும் அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மறைமுகமாக ஆதரவு கிடைக்கும்.
ஆனால் மீண்டும் தேர்தலை சந்தித்து முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கலாம் என பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் விரும்புவதாக கூறப்படுகிறது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications