டெல்லி சட்டசபை தேர்தல்.. கெஜ்ரிவால் கட்சிக்கு 25 இடங்கள் கிடைக்கும்: கருத்துக் கணிப்பு
டெல்லி: டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 19 முதல் 25 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருப்பதால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அதிர்ந்து போயுள்ளன.
டெல்லி மாநில சட்டசபைக்கு டிசம்பர் 4-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் ஆளும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றுக்கு கடும் போட்டியை உருவாக்கியிருக்கிறது அர்விந்த் கெஜ்ரிவாலின் புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி.
டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பான அனைத்து கருத்து கணிப்புகளிலும் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்றே கூறப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகி உள்ள கருத்துக் கணிப்பில் 19 முதல் 25 இடங்கள் வரை கெஜ்ரிவால் கட்சி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 தொகுதிகளில்..
டெல்லியின் 28 தொகுதிகளில் அக்டோபர் 16 முதல் 24-ந் தேதி வரை 2,507 வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

செம நெருக்கடி
இதில் காங்கிரஸ் கட்சிக்கு 27%, பாஜகவுக்கு 29% பேர் வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் கெஜ்ரிவால் கட்சிக்கு 28% பேர் வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

கெஜ்ரிவால் முதல்வராக..
அதேபோல் அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக 25% பேர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஷீலா தீட்சித்தின் செயல்பாடுகளுக்கு 49% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஊழல் காங்கிரஸ்
மேலும் 62% பேர் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகம் என்று கூறியுள்ளனர்.

கெஜ்ரிவாலுக்கு 25 இடங்கள்..
இதுவரை கருத்துக் கணிப்புகளில் 18 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்ட கெஜ்ரிவால் கட்சிக்கு தற்போது 19 முதல் 25 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications