துடைப்பமும் கையுமாக டெல்லியில் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்றும் ஆம் ஆத்மி அமைச்சர்கள்
டெல்லி: டெல்லியில் முனிசிபால் கார்பரேஷன் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் குவிந்து கிடக்கும் குப்பைகளை ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் சுத்தம் செய்து வருகிறார்கள்.
ஒழுங்கான ஊதியம் அளிக்குமாறு கோரி டெல்லி முனிசிபால் கார்பரேஷன் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இன்று 5வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக தலைமையிலான கார்பரேஷன் ஆட்களை பாஜக தான் தூண்டிவிட்டு வேலை நிறுத்தம் செய்ய வைத்துள்ளதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
{ventuno}
சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுமாறு பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தனது துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியினர் இன்று காலை துடைப்பங்களுடன் சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி வருகிறார்கள்.
குப்பையை அகற்றும் பணியில் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் ஈடுபடுகிறார்கள். கார்பரேஷன் ஆட்களுக்கு சம்பளம் அளிக்க டெல்லி அரசு பணம் அளிக்கவில்லை என்கிறது பாஜக. ஆனால் பணம் கொடுத்தும் அதை பாஜக கார்பரேஷன் ஊழியர்களுக்கு அளிக்கவில்லை என்கிறது ஆம் ஆத்மி கட்சி.
இது குறித்து டெல்லி சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஷ்ரா கூறுகையில்,
முதல்வர் கெஜ்ரிவால் பணம் அளித்தும் பாஜக தலைமையிலான முனிசிபால் கார்பரேஷன் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. துப்புரவு தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் டெல்லியை அசுத்தம் அடைய விட மாட்டோம். நாங்கள் சுத்தம் செய்வோம் என்றார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications