டிராபிக் போலீசுடன் தகராறு... ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சரிதா சிங் மீது வழக்குப் பதிவு
டெல்லி: டெல்லி சாலையில் போக்குவரத்து போலீசுடன் மோதலில் ஈடுபட்டதாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சரிதா சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., சரிதா சிங். நேற்று மாலை இவர் டெல்லியின் வடகிழக்குப் பகுதியான ரோடாஸ் நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நின்றிருந்த போக்குவரத்து காவலரின் மோட்டார் பைக் மீது அவரது கார் இடித்துள்ளது. உடனடியாக மோட்டார் பைக்கில் அமர்ந்திருந்த போலீஸ்காரர் கீழே குதித்ததால் காயமின்றி அவர் உயிர் தப்பினார்.

அதனைத் தொடர்ந்து, போலீசிற்கும் சரிதாசிங்கின் கார் டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரிதா சிங், சம்பந்தப்பட்ட போலீசை தகாத வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நேரில் பார்த்த ஒருவரால், வீடியோவாக எடுக்கப்பட்டு சமூகவலைதளங்களில் பரவியது.
இந்த சம்பவத்தையடுத்து, போக்குவரத்து அதிகாரியின் வாகனம் மீது மோதியது மற்றும் அவரிடம் தவறாக நடந்து கொண்டது என சரிதாசிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சரிதாசிங் கூறுகையில், ‘போக்குவரத்து போலீசாருக்கும் தனது கார் டிரைவருக்கும் இடையே வாய்த் தகராறு மட்டுமே நடந்ததாக' தெரிவித்துள்ளார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications