ஆளுநரை நேரில் சந்தித்து உரிமை கோரியது ஆம் ஆத்மி! 26-ல் கெஜ்ரிவால் பதவியேற்பு!!
டெல்லி: டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைக்க துணை ஆளுநர் நஜீப்பை நேரில் சந்தித்து உரிமை கோரியுள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். வரும் 26-ந் தேதி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநிலத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் கூடுதல் இடங்கள் கிடைத்தபோதும் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு போதுமான ஆதரவு இல்லை. 28 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி அமைக்க 8 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி முன்வந்தது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி, மக்களிடத்தில் கருத்து கணிப்பை மேற்கொண்டது. இதில் 80% பேர் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தார்.
பின்னர் டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப்பை அவரது இல்லத்தில் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் நேரில் சென்று கெஜ்ரிவால் சந்தித்தார். அப்போது டெல்லியில் ஆட்சி அமைக்க கெஜ்ரிவால் உரிமை கோரினார்.
பதவியேற்பு எப்போது?
ஆளுநரின் அதிகாரப்பூர்வ அழைப்பைத் தொடர்ந்து டெல்லியில் வரும் 26-ந் தேதியன்று முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்பார் என்று ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications