டெல்லியில் 70 தொகுதிகளுக்கு 70 தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டது கெஜ்ரிவால் கட்சி

டெல்லியில் உள்ள மொத்தம் 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 4-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டு இன்று அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
இத்தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் விளக்கினார். இது குறித்து அவர் கூறியதாவது:
நாங்கள் டெல்லி முதல்வரை மட்டும் மாற்ற வேண்டும் என்று விரும்பவில்லை. ஊழலுக்கு வழிவகுக்கும் நிர்வாக அமைப்பையே மாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிற மாநிலங்களைப் போல டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோருவோம். நாங்கள் அரசின் கொள்கை முடிவெடுக்கும் அமைப்பு முறையை மாற்றுவோம்.
கிராமசபைகளைப் போல முகல்ல சபைகள் உருவாக்கப்பட்டு அவற்றின் கீழ் குப்பை சேகரிப்பு, சாலை சீரமைப்பு, பூங்கா சீரமைப்பு ஆகிய பொறுப்புகள் கொடுக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் இத்தகைய அமைப்பு உருவாக்கப்படும்.
டெல்லியில் ஆட்சி அமைத்தால் டிசம்பர் 29-ந் தேதியன்று லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம். அதேபோல் டெல்லி லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்ற சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்படும்.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் தற்போதைய மின் கட்டணம் 50% குறைக்கப்படும். குடிநீர் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்போம். ஒப்பந்த ஊழியர் முறையே கிடையாது. அனைவரும் நிரந்தர ஊழியர்களாக்கபப்டுவர்.
டெல்லி ஜன்லோக்பால் மசோதாவின் படி அனைத்து அரசு ஊழியரகள், தலைவர்கள் தங்களது சொத்துவிவரங்களை வெளியிட வேண்டும் என்றார்.
அத்துடன் முதல் முறையாக 70 சட்டசபை தொகுதிகளுக்கும் 70 தேர்தல் தேர்தல் அறிக்கைகளை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டிருகிறது.












Click it and Unblock the Notifications