கேஜ்ரிவால் அரசை கவிழ்க்க மோடியின் நண்பர் ரூ30 கோடி பேரம்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பகீர் புகார்
டெல்லி: டெல்லி கேஜ்ரிவால் அரசை கவிழ்க்க தம்மிடம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் ஒருவர் ரூ30 கோடி கொடுக்க முன்வந்ததாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. மதன் லால் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது. அண்மையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னி, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலரை சேர்த்துக் கொண்டு அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவேன் என மிரட்டி வருகிறார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. மதன் லால் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
அருண் ஜேட்லியுடன் சந்திப்புக்கு..
கடந்த ஆண்டு டிசம்பர் 7-ந் தேதியன்று பகல் 12.34 மணிக்கு இண்டர்நேஷனல் எண்ணில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. அந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர் என்னை அருண் ஜேட்லியுடன் சந்திக்க வைக்க விரும்புவதாக கூறினார்.
மோடிக்கு நெருக்கமான நபர்..
10 நாட்கள் கழித்து மற்றொரு நபர் என்னை சந்தித்து பேசினார். அவர் என்னிடம், நான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவன்.
9 எம்.எல்.ஏக்கள்.. சிஎம் பதவி கன்பார்ம்
உங்களுடன் 9 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு வெளியே வர முடியுமானால் உங்களை டெல்லி முதல்வராக்குகிறேன்.
ரூ30 கோடி பேரம்
இதற்காக உங்களுக்கு ரூ20 கோடி முதல் ரூ30 கோடி வரை கொடுக்க தயராக இருக்கிறேன்.
தலா ரூ10 கோடி
மற்ற எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ10 கோடி தர இருக்கிறேன் என்று கூறினார். இந்த உரையாடலை நான் பதிவு செய்யவில்லை... ஆனால் இது உண்மை.
இவ்வாறு மதன் லால் புகார் கூறினார். ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏ. ஒருவர் பகிரங்கமாக பாஜகவின் பேரம் பற்றி புகார் தெரிவித்திருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications