'அரசியல் பழிவாங்கலை நடத்திய ஆணவ சக்திகளை' வீழ்த்திய ஆம் ஆத்மி... மமதா பானர்ஜி புகழாரம்!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில், ''அரசியல் பழிவாங்கலை ஆணவத்துடன் மேற்கொண்ட சக்திகளை" வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது ஆம் ஆத்மி கட்சி என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியை எதிரும் புதிருமான இடதுசாரிகளும் ஆதரித்தனர்; மமதாவின் திரிணாமுல் காங்கிரஸும் ஆதரித்தது.
My hearty congratulations to AAP for sweeping Delhi Elections. All the best @ArvindKejriwal the new CM
— Mamata Banerjee (@MamataOfficial) February 10, 2015 இந்நிலையில் டெல்லியில் வரலாறு காணாத வெற்றியை ஆம் ஆத்மி பெற்று சரித்திரம் படைத்துள்ளடு. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் மமதா பானர்ஜி பதிவிட்டுள்ளதாவது:
Delhi elex is turning point of present political situation. Shows political vendetta has no place in a democracy. Country needed this change
— Mamata Banerjee (@MamataOfficial) February 10, 2015 ஆம் ஆத்மியின் வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி.. அரசியல் பழிவாங்கலையும் வெறுப்புணர்வுகளையும் பரப்பி ஆணவ சக்திகளுக்கு மிகப் பெரிய தோல்வி..
This is a victory for the people and a big defeat for the arrogant and those who are doing political vendetta & spreading hate among people
— Mamata Banerjee (@MamataOfficial) February 10, 2015 டெல்லி வாக்காளர்கள், ஆம் ஆத்மி தொண்டர்கள், தலைவர்களுக்கு இந்த மாபெரும் வெற்றிக்காக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம்.
My congratulations to all the Delhi voters, AAP workers and leaders for big victory. Well done to you. All my best wishes. We are very happy
— Mamata Banerjee (@MamataOfficial) February 10, 2015 தற்போதைய அரசியல் சூழலில் டெல்லி தேர்தல் முடிவுகள் ஒரு திருப்புமுனையாகும். ஜனநாயகத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு இடம் இல்லை என்பதையே இம்முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. நாடு மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறது.
டெல்லி தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற ஆம் ஆத்மிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள். புதிய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் வாழ்த்துகள்.












Click it and Unblock the Notifications