ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு: பீட்டா வக்கீலாக ஆஜராகும் காங். மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி!
ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கில் பீட்டாவுக்காக மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராக உள்ளார்.
டெல்லி: தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக பீட்டா வழக்கறிஞராக காங்கிரஸ் கட்சியின் செய்த் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராக உள்ளார்.
ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாள உரிமை மீட்புக்காக வரலாறு காணாத யுக புரட்சியை நடத்திக் காட்டியது தமிழக இளைஞர் சமூகம். இதன்விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை முதலில் தமிழக அரசு கொண்டுவந்தது.

பின்னர் நிரந்தர சட்டமாக்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
இம்மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் திங்கள்கிழமையன்று விசாரிக்க உள்ளது. பீட்டா சார்பில் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி ஆஜராகிறார்.
இந்த அபிஷேக் மனு சிங்விதான் சேகர் ரெட்டி கூட்டாளிகளுக்காக உச்சநீதிமன்றத்தில் ஆஜரானவர். தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞராக ஆஜராக உள்ளார். இதற்கு தமிழக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பீட்டா வேலையை காட்டத் தொடங்கியிருப்பது தமிழகத்தில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications