மாணவர்களுக்கு நடுவே சிறகடித்துப் பறந்த "அக்னிச் சிறகுகள்"
சென்னை: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், முதன்மை விஞ்ஞானிகளில் ஒருவருமான அப்துல் கலாம் இன்று மேகலாயாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 83.
குடியரசுத் தலைவராக பதவி வகித்த போதிலும், மாணவர்களின் மேல் அபாரமான நம்பிக்கை கொண்டிருந்தவர்.

மாணவர்களுக்கும், அவருக்குமான உறவு மிகவும் பின்னிபிணைந்தது.
காற்றில் கலந்த கலாம்:
அதற்கு உதாரணமாக திகழும் வகையில் இன்று ஐ.ஐ.எம் கருத்தரங்கில் பேசிக் கொண்டிருக்கும் போதே தன்னுடைய இறுதி மூச்சினை நிறுத்திக் கொண்டுள்ளார் கலாம்.
ஏழைக் குடும்பத்தின் இணையில்லா வைரம்:
மாணவர்களுக்கு உதாரண மனிதராக விளங்கிய கலாம், ஏழைக் குடும்பத்தில் பிறந்து விஞ்ஞானியாய் ஜொலித்து பின்னர், குடியரசுத் தலைவரானவர். அதனாலேயே, மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்பதில் அவர் உறுதி மிக்கவராய் விளங்கினார்.
கனவுகளின் நாயகன்:
"கனவு காணுங்கள் வெற்றி பெறுவீர்கள்" என்ற பொன்னெழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் கலாம். 1999 ஆம் ஆண்டில் விஞ்ஞான ஆலோசகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த கலாம் அவர்கள், அதன்பின்னர் இரண்டு வருடங்களுக்குள் கிட்டதட்ட 1 லட்சம் மாணவர்களுடன் உரையாட வேண்டும் என்ற தீர்மானத்தில் ஸ்திரமாக இருந்தார்.
மாணவர்களால் மன நிறைவு:
தான் இளைஞர்களுடன் முக்கியமாக பள்ளி மாணவர்களுடன் இருக்கும் போது உயர்வாகவும், நிறைவாகவும் உணர்வதாகவும் தெரிவித்தவர் அப்துல்கலாம்.
வல்லரசுக்கு தூண்டுகோல்:
மாணவர்களிடம் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலமாக அவர்களுடைய கற்பனைத் திறனை ஊக்குவித்து இந்தியாவை வல்லரசாக மாற்ற முடியும் என்று ஆணித்தரமாக கூறியவர் கலாம் .குழந்தைகள் போன்று உள்ள மாணவர்களை தலைமைப் பண்பு மிக்கவர்களாக உருவாக்குவதே, சிறந்த கல்வி முறையாக இருக்க முடியும் என்றும் தெரிவித்தவர் அவர்.
கலந்துரையாடலே குறிக்கோள்:
அவர் குடியரசுத்தலைவராக இருந்த காலத்திலும், அதற்கு பின்னரான காலத்தில் அகமதாபாத் மற்றும் இந்தோரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் வருகை பேராசிரியராகவும், அதிபராக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும், பேராசிரியராக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் பிரிவிற்கும், மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழகம் மற்றும் சோமாலியாவில் முழுவதிலும் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சேர்ப்பு, வருகை ஆசிரியராகவும் மாணவர்களுடன் கலந்துரையாடுவதைத் தொடர்ந்து செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள்தான் உயிர் மூச்சு:
மாணவர்களை விரும்பி, உயிர் மூச்சாய் ஏற்ற கலாம் அவர்கள் மாணவர்களிடையே மரித்திருப்பது அவருடைய மாண்பையும், கடைசி நிமிடம் வரையிலும் சோம்பல் அண்டாமல் உழைத்த அவரது சுறுசுறுப்பின் வலிமையையே ஒவ்வொரு மாணவனுக்கும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
-
அண்ணா சாலை மேம்பாலப் பணி 68% நிறைவு.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் சவாலான கட்டுமானம் விறுவிறுப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications