கடந்த தேர்தலில் துல்லியமாக கணித்த ABP C Voter: இப்போ எக்சிட் போல் முடிவு இதுதான்! ஆஹா.. காங்கிரஸ்?
போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 113 முதல் 137 இடங்களிலும், பாஜக 88 முதல் 112 இடங்கள் வரை பிடிக்கும் என ஏபிசி - சி வோட்டர் எக்சிட் போல் ரிசல்ட் தெரிவித்துள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 17ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. ம.பியில் 73.71 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

மத்திய பிரதேச தேர்தல்: மத்திய பிரதேசத்தில் கடந்த 2003, 2008, 2013ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்திருந்தது. 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றன. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ம.பி முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா 22 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு சென்றதால் ஒன்றரை ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்று, மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், 5வது முறையாக மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் உள்ளது பாஜக.
ஜெயிக்க விட்ருவோமா? மத்திய பிரதேசத்தில் ஷாக் கொடுக்கும் பாஜக.. இது Dainik bhaskar எக்ஸிட் போல்!
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் இந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், மத்திய பிரதேசத்தில் கடுமையான போட்டி நிலவும் என்பதை உறுதி செய்துள்ளன.
ஏபிபி சி வோட்டர் கணிப்பு: ஏபிபி - சி வோட்டர் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின் படி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 113 முதல் 137 இடங்களிலும், பாஜக 88 முதல் 112 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் 2-8 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி : 113-137
பாஜக: 88-112
மற்றவை: 2-8
கடந்த முறை துல்லிய கணிப்பு: கடந்த 2018 சட்டசபை தேர்தலின் போது மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 118 இடங்களிலும், பாஜக 106 இடங்களிலும் வெல்லும் எனக் கணித்திருந்தது ஏபிபி - சி வோட்டர் சர்வே. தேர்தல் ரிசல்ட் இதற்கு மிகவும் நெருக்கமாகவே வந்திருந்தது. காங்கிரஸ் 114, பாஜக 109 இடங்களைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
230 சீட்கள் உள்ள மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி நிலவுவதாக பல்வேறு கணிப்புகள் தெரிவித்தாலும், காங்கிரஸ் முந்தும் என்கிறது ஏபிசி சி வோட்டர் எக்ஸிட் போல் கணிப்பு. கருத்துக்கணிப்புகளிலும் கடுமையான போட்டி நிலவும் மத்திய பிரதேசத்தில், கணிப்புகளை உடைத்து எந்தக் கட்சி பெரும்பான்மை பெறப்போகிறது என்பது டிசம்பர் 3ஆம் தேதி தெரியவரும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக இந்தத் தேர்தல்கள் நடப்பதால், இந்தத் தேர்தல்கள் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன. அதிலும், தற்போது தேர்தல் நடப்பதில் பெரிய மாநிலமான மத்திய பிரதேசத்தின் ரிசல்ட் அனைவராலும் உற்று கவனிக்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications