ராஜஸ்தான், ம.பி, சட்டீஸ்கரில் பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்.. 'ஏபிபி' பரபர சர்வே
டெல்லி: மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ம.பி., ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் குறித்து ஏபிபி டிவி சேனல் சர்வே நடத்தி வெளியிிட்டுள்ளது.
இம்மூன்று மாநிலங்களிலமே பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் மூன்று மாநிலங்களிலும் பாஜகவிற்கு தோல்வி கிடைக்க உள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
அதிலும் ராஜஸ்தானில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கருத்து கணிப்பு முடிவுகளை நீங்களும் பாருங்கள்.
[டோல் பிளாசா ஊழியர்களை போட்டு தாக்கிய பாஜக எம்பி, ஆதரவாளர்கள்! ]

ராஜஸ்தானில் அபாரம்
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 142 தொகுதிகளை, காங்கிரஸ் வெல்லும் என்றும், பாஜகவிற்கு, வெறும் 56 தொகுதிகள்தான் கிடைக்கும் என்றும், பிறர், 2 தொகுதிகளை கைப்பற்றக்கூடும் என்றும் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகம் அளித்துள்ளது.

பாதி வாக்கு வங்கி
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியால் 50 சதவீத வாக்குகளை ஈர்க்க முடியுமாம். பாஜகவிற்கு 34 சதவீத வாக்கு வங்கி உள்ளது. பிறர் 16 சதவீத வாக்குகளை பெறக்கூடும் என்று இந்த கருத்து கணிப்பு ஆணித்தரமாக தெரிவிக்கிறது.

மத்திய பிரதேசத்தில் கடும் மோதல்
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சி 122 தொகுதிகளையும், பாஜக 108 தொகுதிகளையும் வெல்லக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கு போட்டி கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 42.2 சதவீத வாக்குகளும், பாஜகவிற்கு 41.5 சதவீத வாக்குகளும் கிடைக்கலாம் என்பதால் வாக்கு சதவீதம் மிக நெருக்கத்தில் உள்ளது.

சட்டீஸ்கர் எளிதான வெற்றி
90 உறுப்பினர் பலம் கொண்ட சட்டீஸ்கரில் 47 தொகுதிகளை காங்கிரஸ் வெல்லும். 40 தொகுதிகளை பாஜக வெல்லும். பிறர் 3 தொகுதிகளை வெல்லக்கூடும் என்று தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் 38.9 சதவீத வாக்குகளையும், பாஜக 38.6 சதவீத வாக்குகளையும் பெறுமாம். வாக்கு சதவீதம் மிக நெருக்கமாக இருக்கிறது கவனிக்கத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications