பாஜக கிட்ட நெருங்கவே முடியாதாம்.. வங்கத்தில் ஹாட்ரிக் வெற்றி பெறும் மம்தா.. P MARQ எக்ஸிட் போல்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 152 முதல் 172 வரையிலான இடங்களை பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று P= MARQ நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க 149 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இடது சாரி கூட்டணியும் களத்தில் மல்லுக்கட்டுகின்றன.

கருத்து கணிப்பு வெளியீடு
ஏற்கனவே தேர்தல் முந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. ஒரு சில கருத்து கணிப்புகள் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தன. வேறு சில கருத்து கணிப்புகள் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவும் என்று தெரிவித்தன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

மம்தா ஹாட்ரிக் வெற்றி
இந்த நிலையில் P= MARQ வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 152 முதல் 172 வரையிலான இடங்களை பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. பாஜக 112 முதல் 132 இடங்களை பெற்று தோல்வியை சந்திக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகள் 10 முதல் 20 இடங்களை மட்டுமே பெறும் என்று கருத்து கணிப்பு எடுத்து காட்டுகிறது.

30 இடங்கள் இழப்பு
தான் மீண்டும் வெற்றி பெறுவேன் என்று மம்தா பாஜகவுக்கு சவால் விட்டு வந்தார். தற்போது அவர் சவாலில் வெற்றி பெறுவார் என்றே கருத்து கணிப்பு கூறுகிறது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி 211 இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றது. அந்த வகையில் பார்த்தால் இப்போது சுமார் 39 இடங்களை மம்தா இழக்கிறார் என்று கணிப்பு தெரிவிக்கிறது.

பாஜக தோல்வி
கடந்த தேர்தலில் 3 இடங்களை மட்டுமே பாஜகவுக்கு கருத்து கணிப்பு அமோக இடங்களை காட்டுகிறது. அதாவது கடந்த தேர்தலை விட பாஜக 124 இடங்களை அதிகமாக பெறுகிறது. ஆனால் இவை வெற்றிக்கு போதுமானதாக இல்லை என்று கருத்து கணிப்பு நமக்கு காட்டுகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications