ஜெ. தீர்ப்பு எதிரொலி: கர்நாடக ஹைகோர்ட்டை சுற்றி 1 கி.மீ தூரத்துக்கு 144 தடை உத்தரவு!
பெங்களூர்: ஜெயலலிதா வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உதவி கமிஷனர் ஷோபா ராணி தலைமையில், ஹைகோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்க ஹைகோர்ட்டை சுற்றி 1 கிலோமீட்டர் தூரத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது பெங்களூர் காவல்துறை.
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா அப்பீல் மனு மீது நாளை மறுநாள் கர்நாடக ஹைகோர்ட் சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க உள்ளார்.

கர்நாடக ஹைகோர்ட், பெங்களூரு நகரின் மையப் பகுதியில் உள்ளது. கர்நாடக மாநில தலைமைச் செயலகமான விதானசவுதா, போலீஸ் கமிஷனர் அலுவலகம், பெங்களூர் பத்திரிகையாளர் மன்றம், சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவற்றில் இருந்து வெகு அருகில்தான் ஹைகோர்ட் அமைந்துள்ளது.
இவ்வளவு முக்கியமான பகுதியில் ஹைகோர்ட் அமைந்துள்ளதால், ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பளிக்கப்படும்போது, குவியும் அதிமுகவினரை கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறைக்கு மிகுந்த அவசியமாகிறது.
எனவே, ஹைகோர்ட் அமைந்துள்ள பெங்களூர் மத்திய மண்டல காவல் ஆணையத்தின், கப்பன்பார்க் சப்-டிவிஷன் உதவி கமிஷனரான ஷோரா ராணியை, ஹைகோர்ட் பாதுகாப்புக்கு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு்ள்ளார்.
மேலும், ஹைகோர்ட் அமைந்துள்ள பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தடை உத்தரவு அமலில் இருக்கும்.
தடையுத்தரவு உள்ள பகுதிகளில் நான்கு பேருக்கு மேல் கூட்டமாக சேர முடியாது. எனவே, தீர்ப்பு பாதகமாக வந்தால் தர்ணா நடத்தவோ, சாதகமாக வந்தால், கொண்டாட்டம் நடத்தவோ முடியாது. தீர்ப்பு காலை 11 மணிக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications