ஒரு கையால் ரயிலையே தூக்கியவராச்சே.. போட்டோ எடுத்த தொண்டர்.. விரட்டி விரட்டி வெளுத்த பாலகிருஷ்ணா
Recommended Video

விசாகப்பட்டினம்: "போட்டோ எடுப்பியா.. போட்டோ எடுப்பியா.." என்று கேட்டு கேட்டு.. விரட்டி விரட்டி தொண்டரை அடித்துள்ளார் நடிகர் பாலகிருஷ்ணா!
என்.டி.ராமராவ் மகன்களில் ஒருவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவரை எல்லோரும் செல்லமாக பாலய்யா என்று கூப்பிடுவார்கள். தெலுங்கு தேசம் கட்சியின் இந்துப்புரம் எம்எல்ஏவாக இருக்கிறார். இப்போது திரும்பவும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதனால் தீவிர பிரச்சாரத்தில் இவர் ஈடுபட்டு வருகிறார். அப்படித்தான் சீப்புருபல்லி பகுதியில் வேனில் நின்றுகொண்டு தேசம் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் பாலகிருஷ்ணா!

தொண்டர்
அப்போது பாலகிருஷ்ணாவை நேரிலும் அருகிலும் பார்த்ததும் தொண்டர்களுக்கு ஒரே குஷியாகி விட்டது. ஏனென்றால், இவர்தான் தன் படங்களில் ரயிலையே கையால் தூக்குபவர்! அதிலும் ஒரு தொண்டர் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு பாலகிருஷ்ணாவை போட்டோ எடுத்தார். இதை பார்த்ததும் பாலகிருஷ்ணா ஒரே டைவ் அடைத்து வேனில் இருந்து இறங்கினார்.
|
வைரல் வீடியோ
தொண்டரிடம் சென்று அந்த காமிராவை பறிக்க முயன்றார். பிறகு சரமாரியாக அடித்து உதைத்தார். ஒரு காமிராவில் போட்டோ எடுத்ததற்காக பாலகிருஷ்ணா டென்ஷன் ஆனாலும், இப்போது தொண்டரை அடித்து உதைப்பதை அங்கிருந்த எல்லாருமே லைவ் டெலிகாஸ்ட் செய்து கொண்டிருந்தனர். இதெல்லாம் இணையத்திலும் பரவிவிட்டது.

ஒய்எஸ்ஆர் காங்.
இது தெலுங்கு தேசம் கட்சியினரை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது. இவரது செயலை கண்டிக்கும் அளவிற்கு இந்த விவகாரம் சென்றுள்ளது. அப்படியானால் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பற்றி கேட்கணுமா என்ன? இதை வைத்தே தங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்கள்!

அடாவடித்தனம்
எவ்வளவோ பாடுபட்டு கட்சியை ஹைடெக் ஆக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார் சந்திரபாபு நாயுடு. மேலும் நம்ம ஊர் காமராஜர்போல கிங் மேக்கர் என்ற பெயரையும் இந்த நாட்டில் பெற்றிருக்கிறார். இவ்வளவு இருந்தும், பாலகிருஷ்ணாவின் அடாவடித்தனங்களை நாயுடுவால் பலமாக கேட்க முடியவில்லை போல தெரிகிறது. நாயுடு பாடுபட்டு கட்சியை ஜான் ஏற்றினால், பாலகிருஷ்ணா ஏதாவது செய்தோ, பேசியோ முழம் சறுக்கி கொண்டு போய் விட்டுவிடுகிறார்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications