லடாக்கில் சிக்கி தவிக்கும் நடிகர் மாதவன்.. இன்ஸ்டாவில் போட்ட ஸ்டோரி.. பின்னணி என்ன?
ஜம்மு காஷ்மீர்: கடும் மழையின் காரணமாக லடாக்கில் உள்ள லே பகுதியில் நடிகர் மாதவன் சிக்கி தவித்து வருகிறார். கடந்த 2008 ம் ஆண்டில் கடும் பனிப்பொழிவால் அவர் லடாக்கில் சிக்கி தவித்த நிலையில் தற்போது லடாக்கின் லே நகரில் சிக்கி தவித்து வருகிறார். விமானம் இல்லை. இதனால் ஊர் திரும்ப முடியவில்லை என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதேபோல் லடாக் பிரதேசத்திலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு அதிகளவில் மழை பெய்து வருகிறது.

இந்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இருப்பினும் மழை தொடர்வதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் நடிகர் மாதவன் லடாக்கின் லே - பகுதியில் சிக்கி தவித்து வருகிறார். இதுதொடர்பாக நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛மீண்டும் லே-வில் சிக்கி உள்ளேன். இங்கு விமானங்கள் இல்லை. 17 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி நடந்துள்ளது’’ என்று கூறினார்.
மேலும் அவர் தனது ஸ்டோரியில் பனி மூடிய மலைகள், மழைக்கான மேகமூட்டம் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து பதிவிட்டு இருந்தார். அதில் மாதவன் லே-வின் காலநிலை பற்றி கூறியுள்ளார். இதுதொடர்பாக மாதவன், கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் லே விமான நிலையம் மூடப்பட்டது. விமானங்கள் இன்றி வீடு திரும்ப முடியவில்லை.
லடாக்கில் நான் படப்பிடிப்புக்கு வரும்போதெல்லாம் இப்படி தான் நடக்கிறது. கடந்த 2008 ம் ஆண்டு லடாக்கின் பாங்காங் ஏரியில் 3 இடியட்ஸ் படப்பிடிப்புக்கா வந்தபோது பனிப்பொழிவில் சிக்கினேன்.இப்போதும் அதே நிலை தான். 17 ஆண்டுக்கு பிறகு லே-யில் சிக்கி இருக்கிறோம். விரைவில் வானம் தெளிவாகும். வீடு வந்து சேருவேன் என்று நம்புகிறேன்'' என கூறியுள்ளார்.
இந்த வீடியோவை நடிகர் மாதவன் இந்த வீடியோவை தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் இருந்து எடுத்துள்ளார். இருப்பினும் அவர் எந்த படப்பிடிப்புக்காக அங்கு சென்றார்? எப்போதும் வீடு திரும்புவார்? என்பது பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications