அப்பான்னா இவர்தான்... மகளின் கனவை நனவாக்க சினிமாவை தூர வைத்த தலைவாசல் விஜய்!
திருவனந்தபுரம்: பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவதில் பெற்றோர்களுக்குக் கிடைக்கும் திருப்தியே அலாதியானது. அதை விட சந்தோஷம் வேறு எதுவுமே இருக்கவும் முடியாது.
திரைத் துறையைச் சேர்ந்த பலரும் தங்களது வாரிசுகளையும் அதே துறையில் களமிறக்கி கோலிவுட்டை கலகலக்க வைத்து வரும் வேளையில், தலைவாசல் விஜய் மிக மிக வித்தியாசமாக, தனது மகளை நீச்சல் சாம்பியனாக உருவாக்கி வருகிறார்.

அஜீத்தின் தலைவாசல் படத்தில் அறிமுகமாகி, பின்னர் குணச்சித்திர வேடங்களில் தனது திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் தலைவாசல் விஜய். சமீபகாலமாக இவர் புதிய பட வாய்ப்புக்களைக் குறைத்துக் கொண்டுள்ளாராம். காரணம் அவரது மகள்.
தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா, நீச்சல் சாம்பியன். ஆரம்பத்தில் விளையாட்டுத்தனமாக நீச்சல் பழகுகிறார் என நினைத்த மகள் போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியதும், தன் மகளின் திறமையை உணர்ந்துள்ளார் தலைவாசல் விஜய். எனவே தொடர்ந்து அத்துறையிலேயே மகளை சாதனை செய்ய ஊக்குவிக்க ஆரம்பித்தார்.
2008ல சென்னையில நடந்த மாநில போட்டியில் ஜெயித்து தனது வெற்றிப் பயணத்தைத் துவக்கிய ஜெயவீணா, 2011ல் ராஞ்சியில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் 5 மெடல் வாங்கியுள்ளார். 2012 டிசம்பரில் இஸ்தான்புல்லில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பாக பங்குகொண்ட இளவயது சாதனையாளர் என்ற சாதனையும் தட்டிச் சென்றுள்ளார். தற்போது கேரளாவில் தொடங்கியுள்ள தேசிய விளையாட்டுப் போட்டியில் ஜெயவீணா பங்கேற்றுள்ளார். கூடவே தலைவாசல் விஜய்யும் வந்துள்ளார்.
இப்போட்டியில் 5 தனி நபர் பிரிவுகளிலும், 2 ரிலே பிரிவுகளிலும் ஜெயவீணா பங்கற்கிறார்.
2016ல் நடக்கவுள்ள ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கங்களையும் பெருமையையும் பெற்று வர வேண்டும் என்பது தான் ஜெயவீணாவின் தற்போதைய கனவாம். அதற்கான முயற்சிகளில் பயிற்சிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
15 வயது மகளின் கனவை நினைவாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளாராம் தலைவாசல் விஜய். நிஜ வாழ்க்கையில் மகளின் எதிர்காலம் மீது அக்கறையும், அன்பும் கொண்ட தந்தையாக இருப்பதைத் தான் தலைவாசல் விஜய் மிகவும் விரும்புகிறாராம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று வித மொழிகளில் நடித்து வரும் தலைவாசல் விஜய், மகளுக்காக தனது படப்பிடிப்பு நாட்களை மாற்றிக் கொள்கிறாராம். இனி வரும் போட்டிகளில் தன் மகள் வெற்றி பெறுகிறாரா, இல்லையா என்பது முக்கியமல்ல, அதில் அவர் பங்கேற்பதே தனது நோக்கம் என ஒலிம்பிக் தத்துவம் பேசுகிறார் தலைவாசல் விஜய்.
ஜெயவீணாவுக்கு, நீச்சல் ஜாம்பவான் மைக்கேல் பெல்ப்ஸ்தான் ஆதர்ச ஹீரோவாம்.
வெல்டன் விஜய்!
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications