ஜெ.வுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நடிகர் சோபன்பாபு.. உறவினர் லலிதா 'பகீர்’ தகவல்
ஜெயலலிதாவுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நடிகர் சோபன் பாபு தான் என அவரது உறவினர் பெங்களூரு லலிதா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
Recommended Video

பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நடிகர் சோபன்பாபு என அவரது உறவினர் லலிதா மீண்டும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
1980-ல் சென்னை மயிலாப்பூரில் ஜெயலலிதா வசித்த போது அவரது வீட்டில் பிரசவம் பார்த்தோம். என்னுடைய உறவினர் ரஞ்சனி ரவீந்தரநாத்தும் நானும் உடன் இருந்தோம்.

சோபன் பாபுதான் தந்தை
ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு தந்தை நடிகர் சோபன் பாபு என்பதாக அனைவரும் கூறினார்கள். சோபன்பாவும் ஜெயலலிதாவும் ஒரே வீட்டில் குடித்தனமும் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஜெ.வுடன் தொடர்பு இல்லை
தனக்கு பெண் குழந்தை பிறந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என ஜெயலலிதா சத்தியம் வாங்கிக் கொண்டார். அதன் பிறகு எங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

வக்காலத்து கையெழுத்து
பெங்களூரு அம்ருதா, ரஞ்சனி ரவீந்தரநாத் குடும்பம் மூலமாகத்தான் என்னிடம் வந்து பேசினார். அவர் தாம் டி.என்.ஏ.சோதனை செய்யப் போவதாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப் போவதாகவும் கூறினார். அதற்காகத்தான் வக்காலத்தில் கையெழுத்து போட்டோம்.

அம்ருதா யார்?
அம்ருதாவைப் பொறுத்தவரையில் சொத்துக்காக பேசுகிறாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ரஞ்சனி ரவீந்தரநாத் குடும்பத்தினருடன்தான் அம்ருதாவுக்கு நல்ல பழக்கம் இருந்தது. எனக்கு அதிகமாக தெரியாது. இவ்வாறு லலிதா கூறினார்.
-
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications