நரேந்திர மோடியுடன் நடிகை கெளதமி "திரில்" சந்திப்பு...!

நடிகை கௌதமி பிரதமர் மோடியை டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடிகை கௌதமி டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

80களில் தமிழின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Actress Gauthami meets Modi

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாபநாசம் படம் மூலம் தமிழில் மீண்டும் மறுபிரவேசம் செய்துள்ளார். இது தவிர நடிகர் கமல் படங்கள் சிலவற்றிற்கு அவர் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றினார்.

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வரும் கௌதமி, புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார் கௌதமி. பிரதமருடனான சந்திப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கூடவே இந்தச் சந்திப்பு குறித்து, "பிரதமர் மோடியைச் சந்தித்தது த்ரிலாக இருந்தது" என கௌதமி குறிப்பிட்டுள்ளார்.

என்ன காரணத்திற்காக கௌதமி பிரதமரைச் சந்தித்தார் எனத் தெரியவில்லை. அவரது புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு தொடர்பாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+