திருப்பதியில் எளிமையாக நடந்தது நமீதா-வீரேந்திர சவுத்ரி திருமணம்.. சரத்குமார், ராதிகா பங்கேற்பு
Recommended Video

திருப்பதி: திருப்பதியில் உள்ள இஸ்கான் தாமரை கோயிலில் நடிகை நமீதா அவரது காதலர் வீரேந்திர சவுத்ரியை இன்று திருமணம் செய்து கொண்டார்.
விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நமீதா.
சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் கலக்கிய நமீதா, வாய்ப்பு குறைந்த நிலையில் சமீபத்தில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டார்.

திருமண அறிவிப்பு
இருப்பினும் அதன்பிறகும் பட வாய்ப்புகள் எதுவும் வந்தபாடில்லை. இதையடுத்து, தனது நீண்ட நாள் காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்யவுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.

நிச்சயதார்த்தம்
அதனை தொடர்ந்து திருப்பதியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து ரசிகர்கள் நமீதாவின் திருமணத்திற்காக எதிர்பார்த்திருந்தனர்.

திருப்பதியில் திருமணம்
இந்நிலையில் திருப்பதி இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் இன்று நமீதாவுக்கும், வீரேந்திர சவுத்திரிக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. தாலி கட்டும்போது பட்டு நிற சேலையில் ஜொலித்த நமீதா, பிறகு நடைபெற்ற வரவேற்பின்போது நீல நிற சேலையில், மணப்பெண் அலங்காரம் செய்திருந்தார்.

சரத்குமார், ராதிகா பங்கேற்பு
இன்று காலை 5.30 மணியளவில் நடைபெற்ற திருமண நிகழ்வில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதேநேரம், சினிமா உலகில் இருந்து நடிகர் சரத்குமாரும் அவர் மனைவி நடிகை ராதிகாவும் திருமண விழாவில் பங்கேற்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications